Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியாவுக்கு இந்த நிலைமையா? வெஸ்ட் இண்டீஸிடம் திணறும் கங்காரு படை!

பார்படோஸ்: ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியைத் தவிர்ப்பதற்குப் போராடி வருகிறது.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 180 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 190 ரன்கள் சேர்த்தது. இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 92 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து இருக்கிறது. தற்போது ஆஸ்திரேலிய அணி 82 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்று இருக்கிறது.

Australia West Indies Test Match Travis Head

இந்த போட்டி நடைபெற்று வரும் பார்படோஸ் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால், ஆஸ்திரேலிய அணி கூடுதலாக 100 ரன்களாவது சேர்க்க முடியுமா என்ற சந்தேகம் உள்ளது. ஒருவேளை 150 அல்லது அதற்கும் குறைவான இலக்கை ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்தால், வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, ஆஸ்திரேலியா அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக திணறி வருகிறது.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் மட்டுமே இதுவரை அரை சதம் அடித்திருக்கிறார். மற்ற வீரர்கள் யாரும் அரை சதத்தைக் கூட எட்டவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியில் முதல் இன்னிங்ஸில் ஷாய் ஹோப் 48 ரன்களும், ராஸ்டன் சேஸ் 44 ரன்களும் எடுத்திருந்தனர்.

இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் சாம் கோன்ஸ்டாஸ் 5 ரன்கள், உஸ்மான் கவாஜா 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேமரான் கிரீன் 15 ரன்களும், ஜோஷ் இங்லிஸ் 12 ரன்களும் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினர்.

இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் டிராவிஸ் ஹெட் 13 ரன்களுடனும், பியூ வெப்ஸ்டர் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றால் இரண்டாவது இன்னிங்ஸில் குறைந்த பட்சம் 200 ரன்கள் எடுக்க வேண்டும்.

Story first published: Friday, June 27, 2025, 8:25 [IST]
Other articles published on Jun 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+