Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மனஅழுத்தம்.. தாங்க முடியவில்லை.. அடுத்தடுத்து புலம்பும் ஆஸி.யின் மூத்த வீரர்கள்.. என்னாச்சு?

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பலர் தீவிரமான கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கஷ்டப்படுவதாக கூறப்படுகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்னும் டெஸ்ட் போட்டிகள் மீதம் உள்ளது.

டெஸ்ட் போட்டிகளுக்கு இடைப்பட்ட நாட்களில் கொரோனா காரணமாக வீரர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். ஒரு நகரத்தில் இருந்து இன்னொரு நகரத்திற்கு செல்லும் போது வீரர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

புதிய வீரர்கள்

புதிய வீரர்கள்

இதுமட்டுமின்றி அணியில் புதிதாக இணையும் வீரர்களும் இதேபோல் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இந்திய வீரர் ரோஹித் சர்மா 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆஸ்திரேலிய வீரர்களும் அணியிலும் இணையும் முன் தனிமைப்படுத்தப்பட்டனர்.

எப்படி

எப்படி

இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பலர் தீவிரமான கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கஷ்டப்படுவதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியின் தீவிரமான கட்டுப்பாடுகள் சில வீரர்களை மனரீதியாக கஷ்டத்துக்கு உள்ளாக்கி உள்ளது என்கிறார்கள்.

ஸ்மித்

ஸ்மித்

உதாரணமாக ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரர் ஸ்மித் கடந்த 4 மாதமாக தனது குடும்ப உறுப்பினர்களை பார்க்கவில்லை. கட்டுப்பாடுகள் காரணமாக இவர் தனது மனைவியை கூட பார்க்க முடியவில்லை. இது ஸ்மித்திற்கு மன அழுத்தத்தை கொடுத்துள்ளது. கடுமையானகட்டுப்பாட்டு விதிகள் காரணமாக இவர் மனஅழுத்ததில் இருந்துள்ளார்.

வில்

வில்

அதேபோல் ஆஸ்திரேலிய அணியின் இன்னொரு மூத்த வீரர் வில் புக்கோவஸ்கியும் இதேபோல் மனஅழுத்ததில் கஷ்டப்பட்டு வருகிறார். இடையில் காயம் காரணமாக வெளியேறிய இவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த அதீத தனிமைப்படுத்துதல் விதி இவருக்கு மன ரீதியாக அழுத்தத்தை கொடுத்துள்ளது என்கிறார்கள்.

புலம்பல்

புலம்பல்

கொரோனா கட்டுப்பாடு காரணமாக மன ரீதியாக எனக்கு கஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது அதீத அழுத்தத்தை கொடுக்கிறது என்று வில் புக்கோவஸ்கி தெரிவித்துள்ளார். இது போக ஆஸ்திரேலிய அணியின் நாதன் லைனும், கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாயாக உள்ளது. இதனால் ஆட்டம் மீது கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறியுள்ளது.

 கொரோனா விதிகள்

கொரோனா விதிகள்

கொரோனா விதிகள் காரணமாக இந்திய வீரர்கள் பாதிப்பதாக பிசிசிஐ நிர்வாகிகள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் கொரோனா விதிகள் காரணமாக ஆஸ்திரேலிய வீரர்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த கொரோனா விதிகளில் தளர்வுகள் கொண்டு வரப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Tuesday, January 5, 2021, 12:35 [IST]
Other articles published on Jan 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+