Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தரக்குறைவான அந்த 2 வார்த்தைகள் தான் எங்க வெற்றிக்கே காரணம்.. இது போதுமா? வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்

பிரிஸ்பேன் : வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 27 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்த வெற்றிக்கு காரணம் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் தங்கள் அணியைப் பற்றி தரக் குறைவாக கூறிய இரண்டு வார்த்தைகள் தான் காரணம் எனக் கூறி இருக்கிறார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிரேக் பிராத்வெயிட்.

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது. அதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த 10 ஆண்டுகளாக மோசமான டெஸ்ட் அணியாக உருமாறி இருக்கும் நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரோட்னி ஹாக் கடுமையான வார்த்தைகளால் வெஸ்ட் இண்டீஸ் அணியை விமர்சனம் செய்தார்.

Australia vs West Indies : Kraigg Brathwaite gave a reply to Rodney Hogg


முதல் டெஸ்டின் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி அடைந்த பின் ரோட்னி ஹாக் தனது விமர்சனத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணி பரிதாபகரமாக, நம்பிக்கையற்று இருப்பதாக கூறி இருந்தார். அதாவது வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா போன்ற பலமான அணிகளுக்கு எதிராக ஆட லாயக்கில்லை என்பதை அப்படி கூறி இருந்தார். அதன் பொருளை புரிந்து கொண்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அதனால் கோபம் அடைந்து இருக்கின்றனர்.

அதன் காரணமாகவே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உத்வேகம் பெற்று 8 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. சுமார் 27 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிடைத்த முதல் வெற்றி இது. இந்த வெற்றிக்கு பின் பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரேக் பிராத்வெயிட், "இந்த வெற்றி நீண்ட காலத்துக்கு பின் ஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ளது. நாங்கள் இதை தொடர்ந்து செய்வோம். இந்த வெற்றிக்கு ஊக்கம் அளித்தது இரண்டு வார்த்தைகள் தான். திரு. ரோட்னி ஹாக் அவர்கள் நாங்கள் பரிதாபகரமாகவும், நம்பிக்கையற்றவர்களாகவும் இருப்பதாக கூறினார். நாங்கள் பரிதாபமான அணி இல்லை என்பதை காட்ட விரும்பினோம். இந்த அளவுக்கு பெரிதான பலம் போதுமா?" என தன் முஷ்டியை மடக்கி பலம் காட்டினார் பிராத்வெயிட். ரோட்னி ஹாக்கிற்கு சரியான பதிலடி கொடுத்தார்.

Story first published: Monday, January 29, 2024, 6:53 [IST]
Other articles published on Jan 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+