Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

AUS vs WI: தலைக்கனம் பிடித்த ஆஸ்திரேலியா செய்த செயல்.. வெகுண்டு எழுந்த வெஸ்ட் இண்டீஸ்

பிரிஸ்பேன் : பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி எங்கே ஜெயிக்கப் போகிறது என்ற அகந்தையுடன் நடந்து கொண்டார் ஆஸ்திரேலிய கேப்டன். எந்த அணியையும் குறைத்து எடை போடக் கூடாது என்பதற்கு பரிசாக தோல்வியை பரிசளித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நம்பிக்கையுடன் முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் குவித்தது.

australia-vs-west-indies-reason-for-australia-loss-is-captain-pat-cummins-declared-in-first-inning

அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்கள் இழந்து 289 ரன்கள் இழந்த போது ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் டிக்ளர் செய்வதாக அறிவித்தார். பொதுவாக டெஸ்ட் போட்டிகளில் எதிரணியை விட கூடுதல் ரன்கள் எடுத்தால் மட்டுமே டிக்ளர் செய்வார்கள். சில சமயம் ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டு பேட்டிங் செய்ய முடியாத நிலை இருந்தாலும் டிக்ளர் செய்வார்கள். ஆனால், கடைசி பேட்ஸ்மேன் ஹேசல்வுட்டுக்கு எந்த பிரச்னையும் இல்லை எனும் போது, கடைசி விக்கெட் வரை நின்று கூடுதலாக ரன்கள் எடுக்க நினைக்காமல் டிக்ளர் செய்தார் பாட் கம்மின்ஸ்.

வெஸ்ட் இண்டீஸ் அணியை விட 22 ரன்கள் குறைவாக எடுத்தும் டிக்ளர் செய்தது கிரிக்கெட் உலகில் விவாதமாக மாறியது. வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் எப்படியும் குறைந்த ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்கும், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் முன் அவர்களால் நிற்கவே முடியாது என்ற தலைக் கனத்தில் 22 ரன்கள் குறைவாக எடுத்தும் டிக்ளர் செய்தார் பாட் கம்மின்ஸ்.

ஆனால், இரண்டாவது இன்னிங்க்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஓரளவு சமாளித்து 193 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணிக்கு 216 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. 3வது விக்கெட் வரை 113 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய அணி அதன் பின் ஷமர் ஜோசப்பின் அனல் பறந்த பந்துவீச்சில் சிக்கி 7 விக்கெட்களை இழந்து 207 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. 22 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்னிங்க்ஸ் டிக்ளர் செய்த ஆஸ்திரேலிய அணி, 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஒரு வேளை முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணியை குறைத்து மதிப்பிடாமல் கடைசி விக்கெட் வரை நின்று ஆஸ்திரேலிய அணி கூடுதலாக 10 ரன் சேர்த்து இருந்தால் கூட இந்தப் போட்டியின் முடிவு மாறி இருக்கலாம். அந்த தலைக்கனம் தான் ஆஸ்திரேலியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் வெற்றியை பெற்றுள்ளது. அதுவும் ஆஸ்திரேலியாவின் கோட்டை என வர்ணிக்கப்படும் காபா மைதானத்தில் இந்தியாவுக்கு பின் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய அணி என்ற பெயரை பெற்றுள்ளது வெஸ்ட் இண்டீஸ்.

Story first published: Sunday, January 28, 2024, 16:00 [IST]
Other articles published on Jan 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+