For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி.க்கு எதிராக ஜெயிக்க வேண்டிய மேட்ச்.. அவசரப்பட்ட ரசல்..! கோட்டை விட்ட வெ. இண்டீஸ்..!

Recommended Video

WORLD CUP 2019 AUS VS WI | கொல்டர் நைல்-ஸ்மித் ஜோடியால் ஆஸ்திரேலியா 288 ரன்கள் குவிப்பு

நாட்டிங்ஹாம்: உலக கோப்பை தொடரில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் வெஸ்ட் இண்டீசை 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது.

1
43653

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. அதில் நாட்டிங்ஹாமில் நடைபெற்ற 10வது போட்டியில் ஆஸ்திரேலியாவும், வெஸ்ட் இண்டீசும் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர், முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் வார்னர், பின்ச் மோசமான துவக்கம் அளித்தனர். இருவரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். தொடர்ந்து வந்த கவாஜா 13 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் டக் அவுட்.

கூல்டர் நைல் அரைசதம்

கூல்டர் நைல் அரைசதம்

அலெக்ஸ் கேரி 45 ரன்கள் எடுத்து, ஆறுதல் அளித்தார். ஸ்மித்துடன் இணைந்த, கூல்டர் நைல், வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை பதம் பார்த்தார். அரைசதமும் கடந்தார். மறு முனையில் ஸ்மித் மிரட்டினார். 73 ரன்களில் கார்டலின் அசத்தல் கேட்ச்சால் வெளியேறினார்.

92 ரன்களில் அவுட்

92 ரன்களில் அவுட்

தொடர்ந்து கூல்டர் நைல் அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்தார். 60 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சர் என 92 ரன்கள் எடுத்த அவர் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் 288 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 200 ரன்களை எட்டுமா என்று எதிர்பார்த்த நிலையில் இந்த ஸ்கோர் ஆஸி. அணிக்கு பெரும் ஆறுதலை தந்தது.

கெயில் ஆட்டமிழப்பு

கெயில் ஆட்டமிழப்பு

289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது வெஸ்ட் இண்டீஸ். கெயிலும், லீவிசும் தொடக்க ஆட்டக்காரர்களாக வந்தனர். 2வது ஓவரிலே விக்கெட். லீவிஸ் 1 ரன்னில் வெளியேறினார். 5வது ஓவரில் 21 ரன்கள் எடுத்த அதிரடி மன்னன் கெயில் ஆட்டமிழந்தார்.

நிலைத்து நின்ற ஜோடி

நிலைத்து நின்ற ஜோடி

பின்னர் ஹோப்பும், பூரனும் 3வது விக்கெட்டுக்கு நிலைத்து நின்றனர். 99 ரன்களில் இந்த ஜோடி பிரிந்தது. அடுத்து வந்த ஹெட்மயரும் 21 ரன்களில் நடையை கட்டினார். ஹோப்பும், ஹோல்டரும் நங்கூரமாக களத்தில் நின்றனர். அவர்களில் எதிர்பாராத விதமாக ஹெட்மயர் ரன் அவுட்டானார்.

சமமான வாய்ப்பு

சமமான வாய்ப்பு

ஆஸி. அணிக்கு அப்போது தான் லேசாக நம்பிக்கை பிறந்தது. வெஸ்ட் இண்டீசுக்கு நம்பிக்கை தந்த ஹோப்பும் 68 ரன்களில் வெளியேற.. ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. வெற்றிக்கான வாய்ப்பு, இரு அணிகளுக்க சமமாகவே இருந்தது என்று கூறலாம்.

அவரசப்பட்ட ரசல்

அவரசப்பட்ட ரசல்

அப்போது களம் இறங்கினார் அதிரடி மன்னன் ரசல். இனி ஆட்டம் ஐபிஎல் ஆக மாறப் போகிறது என்று ரசிகர்கள் ஆர்வம் கொண்டனர். ஆனால் அவர்கள் நினைப்பில் மண் அள்ளி போட்ட ரசல்.. அவசரப்பட்டு ஆடி விக்கெட்டை இழந்தார். அவர் எடுத்தது 15 ரன்கள். ஆட்டம் இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்க... வெற்றியை ஆஸி.யின் பக்கம் மடை மாற்றினார் ரசல்.

வெற்றி கைமாறியது

வெற்றி கைமாறியது

அதன் பிறகு, பிராத்வொய்ட்டும், ஹோல்டரும் கடும் முயற்சி செய்தனர். அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்வதில் உறுதியாக இருந்தனர். ஆனால், 46வது ஓவரில் பிராத்வொய்ட் ஆட்டமிழக்க... அரைகுறையாக இருந்த ஆஸி.யின் வெற்றி முழுமைக்கு மாறியது.

ஸ்டார்க் அபாரம்

ஸ்டார்க் அபாரம்

அதே ஓவரில்.... கடைசி பந்தில் ஹோல்டரும் வெளியேற.. வெற்றி காற்று ஆஸி. அணியிடம் வீசியது. ரசல், பிராத்வொய்ட், ஹோல்டர் ஆகிய மூவேந்தர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர் ஸ்டார்க்.

ஆஸி. வெற்றி

ஆஸி. வெற்றி

50 ஓவர்கள் முடிவில், வெஸ்ட் இண்டீஸ் அணி 273 ரன்கள் மட்டுமே எடுக்க... ஆஸி.அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கூல்டர் நைலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 2 போட்டிகளிலும் வென்று, புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது ஆஸ்திரேலியா.

Story first published: Friday, June 7, 2019, 0:26 [IST]
Other articles published on Jun 7, 2019
English summary
Australia won by 15 runs against west indies in world cup 2019.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+