Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா.. அஸ்வினுக்கு ஆப்பு வைத்த ரோகித்.. தொடக்க வீரராக விராட் கோலி!

ராஜ்கோட்: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் தொடங்கியுள்ளது. ஏற்கனவே இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருந்தாலும், ஒயிட் வாஷ் செய்து சாதனை படைக்கும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. அதேபோல் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் அணிக்கு திரும்பி இருக்கின்றனர்.

Australia won the toss and chose to bat against India in the 3rd ODI at Rajkot

இந்த நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கம்மின்ஸ், ஸ்டார்க், மேக்ஸ்மெல், தன்வீர் சங்கா, மிட்செல் மார்ஷ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் பேசுகையில், பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

எங்கள் அணியில் உள்ள அனைவருக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. கடந்த இரு போட்டிகளின் முடிவு எங்களுக்கு சாதகமாக இல்லை. அதனை இந்தப் போட்டியில் மாற்றுவோம் என்று நினைக்கிறேன். இந்த மைதானத்தில் ஏராளமான போட்டிகளில் விளையாடி இருக்கிறோம். ஆஸ்திரேலிய அணியில் மொத்தமாக 5 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து ரோகித் சர்மா பேசுகையில், கடந்த ஒரு போட்டிகளில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுத்தது மனரீதியாக தயாராவதற்காக தான். கடந்த இரு போட்டிகளில் இந்திய வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினார்கள். ஆடுகளம் உலர்வாக இருப்பதால், இரண்டாவது பேட்டிங் கடினமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் போட்டியில் நான், விராட் கோலி மற்றும் குல்தீப் யாதப் அணிக்கு திரும்பி இருக்கிறோம். கடந்த போட்டியில் ஆடிய அஸ்வினுக்கு பதில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இஷான் கிஷன் காய்ச்சல் காரணமாக விலகியுள்ளதாக தெரிவித்தார்.

இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப், பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா

ஆஸ்திரேலிய அணி விவரம்: மிட்செல் மார்ஷ், வார்னர், ஸ்மித், லபுஷேன், கேரி, மேக்ஸ்வெல், க்ரீன், கம்மின்ஸ், ஸ்டார்க், தன்வீர் சங்கா, ஹேசல்வுட்

Story first published: Wednesday, September 27, 2023, 13:20 [IST]
Other articles published on Sep 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+