ரோஹித் சர்மா 264 ரன் அடிச்சவர்.. அவர் ரன் அடிக்கிறதை தடுத்து நிறுத்த முடியாது
Recommended Video

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மாக்ஸ்வெல், இந்திய அணியின் முன்னணி வீரர் ரோஹித் சர்மாவை ரன் குவிப்பில் இருந்து நிறுத்துவது கடினம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. அங்கே வரும் நவம்பர் 21 முதல் டி20 போட்டியில் ஆட உள்ள இந்தியா, தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் ஆட உள்ளது.
இந்த நிலையில், டைரக்ட் ஹிட் என்ற ஆஸ்திரேலிய இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்த மாக்ஸ்வெல், ரோஹித் பற்றி இப்படி உயர்வாக பேசியுள்ளார்.
நிறுத்த முடியாது
ரோஹித் சர்மா பற்றி தன் பேச்சில் குறிப்பிட்ட மாக்ஸ்வெல், அவர் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன்களான 264 ரன்கள் அடித்தவர். அவரை எல்லாம் (ரன் குவிப்பதில் இருந்து) நிறுத்த முடியாது என கூறினார்.

பந்தை சரியாக கணிப்பார் ரோஹித்
மேலும், ரோஹித் வேகப்பந்துவீச்சு மற்றும் சுழல் இரண்டையுமே அடித்து ஆடக் கூடியவர் எனவும் தெரிவித்தார். ரோஹித் சர்மா பந்தை சரியாக கணித்து, சரியான நேரத்தில் அடிக்கும் திறன் பெற்று இருக்கிறார் எனவும், அதுதான் ரோஹித்தின் சிறப்பு எனவும் கூறினார் மாக்ஸ்வெல்.

மூன்று இரட்டை சதம்
ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் இதுவரை மூன்று முறை இரட்டை சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஒரு முறை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 209 ரன்கள் அடித்தார்.

ஆஸ்திரேலியாவில் ரன் வேட்டை
ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் சராசரி 47 வைத்துள்ளார். அதே சமயம் ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக 57.50 சராசரி வைத்துள்ளார். இந்த முறை ரோஹித் சர்மா டெஸ்ட் அணியிலும் இடம் பிடித்துள்ளார் என்பதால் ரோஹித் ஆஸ்திரேலியாவில் ரன் வேட்டை நடத்த அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications