Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டன்சி அழைப்பு.. புனே அணியிடம் என்ன கேட்டேன் தெரியுமா? தோனி உடனான உறவை சிலாகிக்கும் ஸ்டீவ் ஸ்மித்

அகமதாபாத்: 2017ஆம் ஆண்டு புனே அணிக்காக கேப்டன்சி செய்த ஸ்டீவ் ஸ்மித், தோனியுடன் செலவிட்ட நேரங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.

ஐபிஎல் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

அடுமட்டுமல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் என்பதால், அவரை களத்தில் காண ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

Australian Cricketer Steve Smith spoke about his Relationship with MS Dhoni

அதேபோல் தோனி குறித்து பல்வேறு நினைவுகள், தோனியுடனான அனுபவங்களை முன்னாள் வீரர்களும், தற்போதைய வீரர்களும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஐபிஎல் தொடரில் கேப்டனாக இல்லாமல் தோனி ஒரேயொரு சீசனில் மட்டும் களமிறங்கினார். 2017ஆம் ஆண்டு புனே அணிக்காக விக்கெட் கீப்பர் / பேட்ஸ்மேனாக தோனி களமிறங்கிய போது, ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டார்.

நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரில் ஆஸி. அணியின் ஸ்டீவ் ஸ்மித் வீரராக அல்லாமல் வர்ணனையாளராக முதல்முறையாக களமிறங்குகிறார். இந்த நிலையில் தோனியுடனான அனுபவங்கள் குறித்து ஸ்டீவ் ஸ்மித் பகிர்ந்துள்ளார். அதில், புனே அணி நிர்வாகத்தில் இருந்து முதல்முறையாக என்னை கேப்டன்சிக்காக அணுகினார்கள். அப்போது மிகவும் பதற்றமாக உணர்ந்தேன். இன்னும் சொல்லப் போனால், அமைதியே நிலவியது.

இதன்பின்னர் என்னை கேப்டன்சிக்காக அணுகியதை தோனியிடம் கூறிவிட்டீர்களா என்று கேட்டேன். உண்மையில் நான் அன்றைய நாளில் புனே அணி நிர்வாகத்துடன் வித்தியாசமாக நடந்துகொண்டேன். சில நேரம் அச்சமாக இருந்தது. ஏனென்றால் சென்னை அணிக்காக அனைத்து சீசன்களிலும் தோனியே கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதனால் ஒரு கட்டத்தில் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்த பின், தோனியுடன் சிறந்த நேரங்கள் அமைந்தது.

எனக்கு பல்வேறு தருணங்களில் முடிவுகள் எடுக்க கடினமாக இருந்த போது அவருடன் தான் ஆலோசித்தேன். எனக்கு சிறந்த வழிகாட்டியாக அமைந்தார். ஒவ்வொரு முறையும் எனக்கு தோன்றும் அனைத்து சிந்தனைகளையும் தோனியிடம் கூறினேன். அதேபோல் விக்கெட் கீப்பராக ஆட்டத்தை அணுகும் முறை பிரம்மிக்க வைக்கும். அதேபோல் இந்திய மைதானங்கள் குறித்து தோனியின் அனுபவத்திற்கு ஈடு இணையே கிடையாது. அதேபோல் தோனியிடம் கற்றுக் கொண்ட தலைமைப் பண்புகள் அந்த ஐபிஎல் சீசனில் மட்டுமல்லாமல், அனைத்து நேரங்களிலும் உதவியாக உள்ளது.

அவரின் தொழில்கள், அடுத்தடுத்த ஆண்டுகளில் அவரின் வளர்ச்சி, இன்னும் முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் அனைத்து நேரங்களிலும் எதைப் பற்றியும் கவலைகொள்ளாதது போல் கடைபிடிக்கும் அமைதியை கற்றுக் கொண்டேன். ஏனென்றால் சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவேன். ஆனால் தோனியுடன் நேரம் செலவிட்ட பின் அமைதியாக இருக்க முயற்சித்தேன். அதேபோல் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், சாதாரணமாக இருக்க வேண்டும் என்பதை அறிந்துகொண்டேன். அதுதான் தோனியுடம் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, March 30, 2023, 14:00 [IST]
Other articles published on Mar 30, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+