Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அய்யோ! கோலி பயங்கரமானவர் ஆச்சே! விராட் கோலி குறித்து ஒரு வார்த்தையில் பதில் சொன்ன ஆஸி. வீரர்கள்

ஐபிஎல் தொடரின் போது சிஎஸ்கே, ஆர் சி பி, மும்பை என நாம் பிரிந்து இருந்திருப்போம். ஆனால் இந்தியா என்று வந்தால் அனைத்து ரசிகர்களும் ஒன்று இணைந்து அனைத்து கிரிக்கெட் வீரர்களையும் ஒன்றாக கொண்டாடுவோம்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் அது விராட் கோலி கையில் தான் இருக்கிறது.

Australian cricketers lauds virat kohli with a one word

விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தால், அது இந்தியாவுக்கு பெரும் சாதகமாக அமையும். இந்த நிலையில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தினாலே இந்திய அணி தோற்றுவிடும் என்ற இமேஜ் மற்ற அணி ரசிகர்களிடம் இருக்கிறது. இந்த நிலையில், விராட் கோலி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று ஆஸ்திரேலிய வீரர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர்கள் ஒற்றை வரியில் பதிலளித்திருக்கிறார்கள். அது என்னவென்று தற்போது பார்க்கலாம்
விராட் கோலி குறித்து ஸ்மித் பேசுகையில், அவர் ஒரு சூப்பர் ஸ்டார் எங்களுக்கு எதிராக விளையாட மிகவும் ஆசைப்படுவார் என்று கூறினார். இதேபோன்று கேப்டன் பாட் கமின்ஸ் கூறுகையில் சவாலுக்கு எப்போதும் தயாராக இருப்பார் என்று பாராட்டினார்.

டேவிட் வார்னர் விராட் கோலி குறித்து கூறுகையில் அவருடைய கவர் டிரைவ் நம்ப முடியாத அளவுக்கு இருக்கும் என பதில் கூறினார். இதேபோன்று ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபஸ்சேன், விராட் கோலி குறித்து கூறுகையில் அவர் கிரிக்கெட் விளையாடியதிலே சிறந்த வீரர்களின் ஒருவர் என்று பாராட்டினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ஆல் ரவுண்டர் கேமரான் கிரீன் கூறுகையில், இந்தியாவின் மனிதர் என்று புகழாரம் சூட்டினார்.

முன்னாள் ஆர் சி பி வீரரும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரருமான ஸ்டார்க் கூறுகையில் இந்திய அணியின் நடு வரிசையில் முதுகெலும்பு ,திறமையான வீரர். நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்து வருகிறார் என பாராட்டினார். கவாஜா கூறுகையில் அனைத்து வீரர்களும் அவரை ஒப்பிட்டுப் பார்க்க ஆசைப்படுவார்கள் என்று கூறினார்.

Story first published: Saturday, June 3, 2023, 21:56 [IST]
Other articles published on Jun 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+