
முதல் சுற்று
இது ஒருபக்கம் இருக்க, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், அதிரடி வீரருமான ஆரோன் பின்ச்சை எந்த அணியும் சீண்ட கூடவில்லை. ஆம்! ஏலம் தொடங்கிய உடனேயே ஏலத்தில் விடப்பட்ட ஆரோன் பெயரை எந்த அணியும் கண்டுகொள்ளவில்லை.

எதிர்பார்த்தது தான்
ஆஸ்திரேலியாவின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் தொடக்க வீரராக களமிறங்கும் பின்ச், எதிராணிகளின் பந்துகளை லெக் சைடில் பறக்க விடுவதில் வல்லவர். அதிரடிக்கு பெயர் போன பின்ச் ஏலத்தில் விலை போகாதது அதிர்ச்சி தான் என்றாலும், இது எதிர்பார்த்த ஒன்றே.

அதிரடி எங்கே?
இதற்கு முக்கிய காரணம், அவர் இதற்கு முன் விளையாடிய பெங்களூரு அணியில் போதுமான வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தும், அதை அவர் பெரிய அளவுக்கு பயன்படுத்தவில்லை. தனது வழக்கமான அதிரடி இன்னிங்ஸை வெளிப்படுத்தவில்லை. வருவதும் போவதுமாக இருந்தார்.

நம்பி எடுக்கலாமா?
ஸ்பின், பேஸ் என்று இரண்டு வித பவுலிங் ஆப்ஷனிலும் எளிதில் வீழ்ந்து, எதிரணிகளுக்கு செல்லப்பிள்ளையாக இருந்தார். குறிப்பாக, இளம் வீரர் தேவ்தத் படிக்கல், பெங்களூரு அணிக்காக ஓப்பனிங் இறங்கி ஒவ்வொரு போட்டியிலும் அசத்திக் கொண்டிருக்க, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பின்ச் அவருக்கு பக்கபலமாக இல்லாமல் விரைவில் அவுட்டாவதை வழக்கமாக கொண்டிருந்ததே பெங்களூரு அணியின் விரக்திக்கு முக்கிய காரணம். இதை நோட் செய்த மற்ற அணிகளும், அவரை நம்பி ஏலத்தில் எடுக்க தயங்கியுள்ளன.
எனினும், இறுதிக் கட்ட ஏலத்தில் அவர் விலை போகிறாரா என்று பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











