Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்தை மட்டுமல்ல… சச்சின் சாதனையையும் சமர் செய்த நாயகன்..!! பாராட்டும் கிரிக்கெட் உலகம்

Recommended Video

Ashes 2019 : Steve Smith scored double century

மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சச்சின் சாதனையை தகர்த்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.

ஆஷஸ் தொடரின் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மோதும் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

காயம் காரணமாக 3வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத ஆஸி. முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இந்த டெஸ்டில் மீண்டும் களமிறங்கி உள்ளார். இங்கிலாந்து பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வரும் ஸ்மித், இதிலும் அந்த சொப்பனத்தை விடவில்லை. அடி, வெளுத்துவிட்டார்.

மழையால் பாதிப்பு

மழையால் பாதிப்பு

தொடக்க வீரர்கள் மார்கஸ் 13 ரன்னிலும் வார்னர் டக் அவுட்டாகி வெளியேறினர். ஸ்மித் சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினார். மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்ட நேரம் நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது.

திணறிய இங்கிலாந்து

திணறிய இங்கிலாந்து

டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் ஸ்மித்தின் ஆதிக்கம் அமோகம். இங்கிலாந்து பந்துவீச்சை திணறடித்தார். பந்துகளை விளாசி தள்ளினார். எவ்வளவு முயன்றும் ஸ்மித்தை அவுட்டாக்க முடியாமல் திணறினர். அதிரடி, கொஞ்சம் பொறுப்புடன் ஆடிய ஸ்மித் தமது 26வது சதத்தை எட்டினார்.

26 சதங்கள் சாதனை

26 சதங்கள் சாதனை

இதன் மூலம் குறைந்த இன்னிங்சில் 26 சதங்கள் அடித்த வீரர்களில் சச்சினை ஸ்மித் முந்தியுள்ளார். முதல் இடத்தில் டான் பிராட்மேன் 69 இன்னிங்சில் 26 சதங்கள் விளாசினார். 2வது இடத்தில் ஸ்மித் 121 இன்னிங்சிலும் உள்ளார். சச்சின் இந்த சாதனையை 136 இன்னிங்சில் தான் எடுத்தார்.

பட்டியலில் யார்?

பட்டியலில் யார்?

ஆஷஸ் தொடரில் நான்கு இன்னிங்சில் விளையாடியுள்ளார் ஸ்மித். அதில் மூன்று சதங்கள் அடித்துள்ளார் .சுனில் கவாஸ்கர் 144 இன்னிங்சிலும், ஹெய்டன் 145 இன்னிங்சில் 26 சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் அடுத்தடுத்து உள்ளனர்.

Story first published: Friday, September 6, 2019, 16:04 [IST]
Other articles published on Sep 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+