Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“நம்ப வச்சு ஏமாத்துறாங்க” நாக்பூரில் ஆஸி, அணி போட்டு வைத்த திட்டம்.. நாசம் செய்த பிசிசிஐ அதிகாரிகள்

நாக்பூர்: இந்தியாவுடனான 2வது டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய அணி நாக்பூரிலேயே திட்டம் போட்டு வைத்திருந்த சூழலில் நாக்பூர் மைதான ஊழியர்கள் அதனை முழுவதுமாக நாசம் செய்துள்ளனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாக்பூரில் கடந்த 9ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

பலகட்ட பயிற்சிகள் மற்றும் திட்டங்களுடன் தயாராகி வந்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்கள் மற்றும் 2வது இன்னிங்ஸில் 91 ரன்களுக்கெல்லாம் சுருண்டது. இதனால் 3வது நாளிலேயே ஆட்டம் முடிந்துவிட்டது.

ஆஸி, டெஸ்ட் தொடர்

ஆஸி, டெஸ்ட் தொடர்

படுமோசமான தோல்வியை பெற்ற ஆஸ்திரேலிய அணி 2வது போட்டியில் நல்ல கம்பேக் தர வேண்டும் என முனைப்புடன் உள்ளது. அந்த போட்டி வரும் பிப்ரவரி 17ம் தேதி முதல் டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான பயிற்சியையும் நாக்பூரிலேயே திட்டமிட்டு வைத்திருந்தார் ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர் ஆண்ட்ரூவ் மெக் டொனால்ட். இந்த முறையும் அதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

நாக்பூர் பிட்ச்-ல் அதிகப்படியான டேர்ன் இருந்தது. இனி வரும் போட்டிகளிலும் இதே போன்ற பிட்ச் தான் பயன்படுத்தப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 3 நாட்களில் ஆட்டம் முடிந்ததால், மீதமுள்ள 2 நாட்களில் அந்த பிட்ச்-ல் பயிற்சி மேற்கொள்ள விதர்பா மைதான நிர்வாகத்திடம் ஸ்பெஷல் கோரிக்கையை ஆஸ்திரேலிய அணி வைத்திருந்தது. அங்கு ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விளையாடி தயாராகவிருந்தனர்.

காத்திருந்த ஷாக்

காத்திருந்த ஷாக்

2 நாட்களுக்கு பிட்ச்-ஐ கொடுப்பதில் மறுப்பு தெரிவிக்க மாட்டார்கள் என நினைத்து ஆஸ்திரேலிய அணியினர் 3வது நாள் முடிந்து ஓட்டல் அறைக்கு சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் சென்ற உடனேயே பிட்ச் முழுவதும் அதிகப்படியான தண்ணீர் ஊற்றப்பட்டுவிட்டது. இதனால் பிட்ச்-ன் தன்மை முற்றிலும் வேறு மாதிரி மாறி அங்கு பயிற்சி பெற முடியாது. இதனை கேட்ட ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வேண்டுமென்றே மாற்றினார்களா?

வேண்டுமென்றே மாற்றினார்களா?

ஒரு போட்டி முடிந்தவுடன் பிட்ச்-ஐ தண்ணீர் விட்டு சுத்தம் செய்வது வழக்கமான ஒன்று தான். ஆனால் போட்டியானது 3வது நாளிலேயே முடிந்துவிட்டது. அப்படி இருக்கையில் அவசர அவசரமாக எதற்காக பிட்ச்-ல் தண்ணீர் விட வேண்டும் என ஆஸ்திரேலிய அணி குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் பதில் அளிக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Story first published: Monday, February 13, 2023, 12:52 [IST]
Other articles published on Feb 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+