Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மணிக்கு 145 கிமீ. வேகம்.. 29 வயதில் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க போராடும் ஸ்டார் பவுலர்

மும்பை: இந்திய அணியில் அறிமுகமாகி நான்கு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் மீண்டும் தேசிய அணிக்குள் நுழைவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பிப்ரவரி 2022-இல் சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான 29 வயதான இவர், இதுவரை 25 டி20 மற்றும் 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

நல்ல உயரம், பந்துகளை ஸ்விங் செய்யும் திறன், இறுதி ஓவர்களில் யாக்கர் என அனைத்து திறனும் கொண்ட ஆவேஷ் கானுக்கு நவம்பர் 2024-க்குப் பிறகு அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அணியில் இருந்து விலக நேரிட்டது. இருப்பினும், அடுத்த தலைமுறை வீரர்களின் வருகைக்கு மத்தியிலும், தேர்வுக்குழுவின் நம்பிக்கையைப் பெற்று மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கான நம்பிக்கையை ஆவேஷ் கான் இழக்கவில்லை.

Avesh Khan bowling during a professional cricket match

"உள்நாட்டு போட்டிகள் தொடங்கும்போது, எனது முழு கவனமும் சிறப்பாக பந்துவீசி, மத்திய பிரதேச அணி போட்டிகளையும் சாம்பியன் பட்டங்களையும் வெல்ல உதவுவதில்தான் இருக்கும். அங்கு நான் வெளிப்படுத்தும் சிறப்பான ஆட்டம் மீண்டும் என்னை சர்வதேச அளவில் வெளிச்சத்திற்கு கொண்டு வரும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

உலககோப்பை வென்று தந்தவரை எப்படி நீக்குவீங்க.. கொஞ்சம் பொறுமையாக இருங்க.. அம்பத்தி ராயுடு கருத்து

உலககோப்பை வென்று தந்தவரை எப்படி நீக்குவீங்க.. கொஞ்சம் பொறுமையாக இருங்க.. அம்பத்தி ராயுடு கருத்து

மத்திய பிரதேச பிரீமியர் லீக்கில் அசத்தல் செயல்பாடு

சமீபத்தில் நடந்து முடிந்த மத்திய பிரதேச பிரீமியர் லீக் (MPL) தொடரின் மூன்றாவது சீசனில், சம்பல் கரியால்ஸ் (Chambal Ghariyals) அணிக்காக விளையாடி ஆவேஷ் கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இத்தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 21.76 சராசரியுடன் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, தனது அணி சாம்பியன் கோப்பையை வெல்ல முக்கியப் பங்காற்றினார்.

இளைய தலைமுறை வீரர்களுக்கு எம்பிஎல் தொடர் ஒரு சிறந்த தளம் என்று குறிப்பிட்ட அவர், "ரஞ்சிக் கோப்பை, சையத் முஷ்டாக் அலி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை மற்றும் ஐபிஎல் போன்ற பெரிய லீக்குகளுக்குச் செல்வதற்கு இத்தொடர் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. ஒரு சீனியர் வீரராக, இளம் வீரர்களுக்கு ஆட்டத்தின் மனரீதியான அணுகுமுறை மற்றும் மன அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து எனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.

ஐபிஎல் 2026 அனுபவமும் ரிஷப் பண்ட் கேப்டன்சியும்

ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்காக 7 போட்டிகளில் மட்டுமே விளையாடி 6 விக்கெட்டுகளை ஆவேஷ் கான் எடுத்திருந்தார். இது குறித்துப் பேசிய அவர், காயங்கள் ஏதும் தமக்கு தடையாக இருக்கவில்லை என்றும், அணியில் வலுவான வேகப்பந்து வீச்சு குழு இருந்ததால் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

மேலும், லக்னோ அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் குறித்துப் பேசுகையில், "அவரது தலைமையில் விளையாடியது ஒரு சிறந்த அனுபவம். அவர் பந்துவீச்சாளர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து, அவர்களின் திட்டங்களைச் செயல்படுத்த முழு ஆதரவை வழங்கக்கூடிய ஒரு சிறந்த கேப்டன்" என்று பாராட்டினார்.

IND vs IRE: இந்திய அணி தோல்விக்கு பல காரணம் இருக்கு.. ஆனால் நீங்க இவரை தான் நீக்குவிங்க-ஆகாஷ் சோப்ரா

IND vs IRE: இந்திய அணி தோல்விக்கு பல காரணம் இருக்கு.. ஆனால் நீங்க இவரை தான் நீக்குவிங்க-ஆகாஷ் சோப்ரா

அனுபவம் வாய்ந்த பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருணுடன் பணியாற்றியது குறித்துப் பேசிய ஆவேஷ் கான், எம்பிஎல் தொடருக்குப் பிறகு சென்னைக்குச் சென்று அவரது அகாடமியில் பந்துவீச்சுப் பயிற்சிகளை தீவிரமாக மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கும் ரஞ்சிக் கோப்பைத் தொடரை இலக்காகக் கொண்டு, தனது உடற்தகுதியையும் பந்துவீச்சையும் மேம்படுத்தி இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவதையே தற்போதைய நோக்கமாகக் கொண்டுள்ளார்.

Story first published: Tuesday, June 30, 2026, 10:20 [IST]
Other articles published on Jun 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+