Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெரிய தலைகளை போட்டுத் தாக்கும் ஆவேஷ் கான்... தொடர் தாக்குதல்களுக்கு வெயிட்டிங்!

அகமதாபாத் : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

Recommended Video

AB De villiers played stormy innings against Delhi capitals|Oneindia Tamil

போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில், முதலில் ஆடிய ஆர்சிபி அணி 171 ரன்களை எடுத்தது.

இந்த இன்னிங்சில் விராட் கோலியின் முக்கியமான விக்கெட்டை எடுத்து அந்த அணியின் ஸ்கோர் உயராமல் பார்த்துக்கொண்டார் டெல்லியின் இளம் பௌலர்.

வெற்றிக்கான தீவிரத்தில் அணிகள்

வெற்றிக்கான தீவிரத்தில் அணிகள்

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 23வது போட்டியில் ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய நிலையில், வெற்றிக்கான தீவிரத்தில் இரு அணிகளும் காணப்படுகின்றன. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

சிறப்பான டீ வில்லியர்ஸ்

சிறப்பான டீ வில்லியர்ஸ்

இதையடுதது பேட்டிங் செய்த ஆர்சிபி அணியின் துவக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் படிக்கல் ஆகியோர் சொதப்பினர். பவர்ப்ளேவில் அந்த அணி வெறும் 36 ரன்களை மட்டுமே அடித்திருந்தது. ஆனால் தொடர்ந்து வந்த பட்டிதார் மற்றும் ஏபி டீ வில்லியர்ஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை சிறப்பாக உயர்த்தினர்.

171 ரன்கள்

171 ரன்கள்

இதையடுத்து அணியின் ஸ்கோர் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171ஆக இருந்தது. அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. பெரிய மைதானமான அதில் டீ வில்லியர்ஸ் 5 சிக்ஸ்கள் மற்றும் 3 பவுண்டரிகளை அடித்திருந்தார்.

இறுதி ஓவரில் 23 ரன்கள்

இறுதி ஓவரில் 23 ரன்கள்

குறிப்பாக இறுதி ஓவரில் 3 சிகஸ்களை டீ வில்லியர்ஸ் அடித்திருந்தார். இறுதி ஓவரில் 23 ரன்களை அந்த அணி அடித்திருந்தது. 42 பந்துகளில் 75 ரன்களை அடித்துள்ளார் டீ வில்லியர்ஸ். மேலும் இந்த போட்டியில் 5000 ஐபிஎல் ரன்களையும் அவர் பூர்த்தி செய்துள்ளார்.

12 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆவேஷ்

12 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆவேஷ்

முன்னதாக இந்த போட்டியில் விராட் கோலியை 4வது ஓவரில் வீழ்த்தினார் ஆவேஷ் கான். முன்னதாக சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் தோனியின் விக்கெட்டையும் அவர் வீழ்த்தியுள்ளார். மேலும் இந்த தொடரில் அவர் இதுவரை 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, April 27, 2021, 22:52 [IST]
Other articles published on Apr 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+