Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆப்கானுக்கு எதிரான ஆட்டம்.. இந்திய அணியில் முக்கிய மாற்றம்.. பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா வெளியேறுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. அப்படி இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் மற்ற அணிகளின் உதவி தேவை.

இன்றைய போட்டியில் பாகிஸ்தானை ஆப்கானிஸ்தான் வீழ்த்த வேண்டும். நாளைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இந்தியா பெரிய ரன் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். இதே போன்று கடைசி போட்டியில் பாகிஸ்தானை இலங்கை வீழ்த்த வேண்டும்.

அப்படி நடந்தால் மட்டுமே இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும். இந்த நிலையில் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்ற பழமொழிக்கு ஏற்ப பிசிசிஐ தற்போது ஒரு மாற்றத்தை செய்ய உள்ளது.

ஆவேஷ் கான்

ஆவேஷ் கான்

அதாவது பிரதான அணியில் இருந்த ஒரு வீரரை நீக்கிவிட்டு, மாற்று வீரருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. ஆவேஷ் கான் ஆசிய கோப்பை தொடரில் மோசமாக பந்துவீசினார். குறிப்பாக ஹாங்காங்க்கு எதிராக பந்துவீச்சில் அரைசதம் கடந்தார். இந்த நிலையில், அவரை அணியிலிருந்து நீக்கிவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

தீபக் சாஹர்

தீபக் சாஹர்

தற்போது, ஆவேஷ் கானுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இருப்பினும் அவரை மாற்றாமல் 2 சூப்பர் 4 போட்டியில் இந்திய அணியிலேயே வைத்திருந்தனர். தற்போது இந்தியா தோற்றதால் கடும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில், அவருக்கு பதிலாக சிஎஸ்கே வீரர் தீபக் சாஹரை அணியில் பிசிசிஐ சேர்த்துள்ளது.

மாற்றம் ஏன்?

மாற்றம் ஏன்?

கடந்த 2 போட்டியிலும் ஒரு பேட்ஸ்மேன் குறைவாக இந்திய அணியில் இருந்தனர். இதனால் கடைசி 2 ஓவரில் பெரிய இலக்கை அடிக்க முடியவில்லை. இந்த நிலையில், தீபக் சாஹர் பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாட கூடியவர். பந்துவீச்சிலும் நல்ல ஸ்விங் செய்ய கூடியவர். துபாயில் ஸ்விங் எடுக்காத நிலையில், பந்துவீச்சில் பல வகையில் வேரியஷன் செய்து விக்கெட் எடுப்பார்.

வேறு யாருக்கு வாய்ப்பு

வேறு யாருக்கு வாய்ப்பு

இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நிச்சயமாக தீபக் சாஹர் இடம் பிடிப்பார். இதே போன்று பிளேயிங் லெவனில் தீபக் சாஹரை நீக்கிவிட்டு அக்சர் பட்டேலையும், ரிஷப் பண்ட்டை நீக்கிவிட்டு தினேஷ் கார்த்திக்கையும் பிளேயிங் லெவனில் சேர்க்க ரோகித் சர்மா முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Story first published: Wednesday, September 7, 2022, 17:37 [IST]
Other articles published on Sep 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+