தோனி, ஜடேஜாவின் சாதனையை முறியடித்த அக்சர் பட்டேல்.. இது வேற லெவல் ரெக்கார்ட் தான்.. முழு விவரம்
மும்பை : டி20 உலக கோப்பையில் அக்சர் பட்டேல் பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும் கடந்த 12 மாதங்களில் அக்சர் பட்டேல் பல பிரமிக்கும் வகையில் பேட்டிங்கில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.
குறிப்பாக இலங்கைக்கு எதிரான கடந்த இரண்டு டி20 போட்டிகளிலும் அக்சர் பட்டேல் ஜொலித்தார்.
நேற்றைய ஆட்டத்தில் இந்தியா தடுமாறிய போது அக்சர் பட்டேல் 31 பந்துகளை எதிர்கொண்டு 65 ரன்கள் விளாசினார். இதில் ஆறு சிக்ஸர்களும் மூன்று பவுண்டர்களும் அடங்கும்.

புதிய சாதனை
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கம்பீர் அக்சர் பட்டேல் அபாரா ஆட்டத்தால் இனி ஜடேஜாவின் இடத்திற்கு ஆபத்து வந்து விட்டதாக கூறியுள்ளார். ஜடேஜா காயத்திலிருந்து மிக எளிமையாக அணிக்கு திரும்பி வர முடியாத படி அக்சர்பட்டேல் விளையாடி வருவதாக கூறியுள்ளார். கம்பீரின் இந்த கூற்றுக்கு வலு சேர்க்கும் வகையில் அக்சர் பட்டேல் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

அதிக ரன்கள்
அதாவது டி20 கிரிக்கெட் பொறுத்த வரையில் இந்திய அணியில் நம்பர் ஏழாவது இடத்தில் இறங்கி அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை அக்சர் பட்டேல் படைத்திருக்கிறார். இதற்கு முன்பாக ரவீந்திர ஜடேஜா 44 ரன்களையும் தினேஷ் கார்த்திக் 41 ரன்களையும் தோனி 38 ரன்களையும் அடித்திருக்கிறார். தற்போது இவர்கள் அனைவரையும் முந்தி அக்சர்பட்டேல், முதலிடத்தில் பிடித்திருக்கிறார்.

அதிவேக அரைசதம்
இதன் மூலம் இந்திய டி20 அணியில் அக்சர் பட்டேல் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்துள்ளார். இலங்கைக்கு எதிரான இந்த டி20 தொடரில் அதிக ரன்கள் ,அதிக சராசரி, அதிக ஸ்ட்ரைக் ரேட் ,அதிக அரைசதம், அதிக சிக்சர், அதிக பவுண்டரி, அதிக விக்கெட் எடுத்த மூன்றாவது வீரர் போன்ற சாதனைகளை படைத்திருக்கிறார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 20 பந்துகளில் அரை சதம் கடந்த அக்சர்பட்டேல் அதிவேகமாக அரை சதம் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றிருக்கிறார்.

தவிர்க்க முடியாத வீரர்
முதலிடத்தில் யுவராஜ் சிங் 12 பந்துகளிலும், கே.எல் ராகுல், சூர்யா குமார் யாதவ் தலா 18 பந்துகளிலும், கௌதம் கம்பீர் 19 பந்துகளிலும், அக்சர் பட்டேல் , யுவராஜ் தலா 20 பந்துகளிலும் அடித்திருக்கிறார்கள். அக்சர் பட்டேல் தன்னுடைய இந்த பேட்டிங்கை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் நிச்சயமாக இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications