Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செய்யும் தொழிலே தெய்வம்.. அயோத்தி ராமர் கோயிலுக்கு போகாத கோலி, ரோகித்.. கிரிக்கெட் தான் முக்கியம்

மும்பை : அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நாளை திங்கட்கிழமை காலை முதல் நடைபெற இருக்கிறது. இதில் நாடு முழுவதும் இருந்து பல அரசியல் கட்சித் தலைவர்கள் சினிமா நட்சத்திரங்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்புகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

பல சினிமா நட்சத்திரங்கள் இன்று அயோத்திக்கு புறப்பட்டு சென்று அங்கு தங்குகிறார்கள். நாளை கும்பாபிஷேக நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து நடிகர் ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட திரைப்படங்கள் பங்கேற்கிறார்கள்.

Ayothi Ram temple inauguration ceremony - virat kohli and rohit sharma may not attend

இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் செல்வார்களா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி தான் தொடங்குகிறது.

இதனால் ஓய்வு நாள் என்பதால் கிரிக்கெட் வீரர்கள் ராமர் கோவில் நிகழ்ச்சிக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தற்போது ஹைதராபாத்துக்கு சென்று இருக்கிறார்கள். முதல் டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்கு தயாராகும் விதமாக கிரிக்கெட் வீரர்கள் தற்போது பயிற்சியை தொடங்கியிருக்கிறார்கள்.

இதனால் நாளை திங்கட்கிழமை அயோதியில் நடைபெறும் நிகழ்ச்சிகள் கோலி, ரோஹித், டிராவிட் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது. கிரிக்கெட் வீரர்களின் இந்த முடிவு ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. நாட்டில் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் இந்த வாய்ப்பை கைவிட்டு செய்யும் தொழிலே தெய்வம், கிரிக்கெட்டே முக்கியம் என்று கோலி, ரோஹித் ஆகியோர் பயிற்சி செய்வதற்காக ஹைதராபாத் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, January 21, 2024, 20:37 [IST]
Other articles published on Jan 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+