Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அது எப்படி நோ பால் கொடுக்கலாம்.. நடுவருடன் பாபர் அசாம் வாக்குவாதம்.. ஸ்டம்பில் பட்டு ரன் ஓடலாமா?

மெல்போர்ன் : 2022 டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடிய ஆட்டத்தில் பல்வேறு டிவிஸ்ட்கள் நடந்தன.

கடைசி 8 பந்தில் 28 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலைமை இருந்தது. அப்போது விராட் கோலி தொடர்ந்து 2 சிக்சரை விளாசினார்.

அப்போது , அதில் ஒரு பந்து விராட் கோலியின் இடுப்புக்கு மேல் வந்தது. இதனை கோலி நோ பால் கேட்டார். ஆனால் அதற்கு நடுவர் நோ பால் தரவில்லை.

நோ பால்

நோ பால்

இந்த நிலையில், கடைசி ஓவரில் 4வது பந்தில் விராட் கோலி சிக்சர் விளாசினார். அப்போது அந்த பந்து மீண்டும் உயரமாக வந்தது. இதனையடுத்து, இதற்கு நோ பால் கேட்டு, விரட் கோலி நடுவரிடம் முறையிட்டார். இதனையடுத்து, நடுவர் அதனை நோ பால் என அறிவித்தார்.

வாக்குவாதம்

வாக்குவாதம்

இதனால் கடுப்பான பாபர் அசாம், நேரடியாக நடுவரிடம் சென்று, இதற்கு எப்படி நோ பால் தரலாம் என வாக்குவாதம் செய்தார். அப்போது பந்து உயரமாக வந்ததாக குறிப்பிட்ட நடுவர்கள், இந்த முடிவை மாற்ற முடியாது என்று கூறினர். இதனால் ஆட்டத்தின் திருப்புமுனை ஏற்பட்டது.

3 ரன்கள்

3 ரன்கள்

இதே போன்று ஃபிரி ஹிட் பந்தில், விராட் கோலி போல்ட் ஆனார். ஆனால் பந்து ஸ்டம்பில் பட்டு, பின்னால் ஓடியது. இதனை பயன்படுத்தி கொண்டு விராட் கோலி 3 ரன்கள் ஓடினார். இதற்கும் பாகிஸ்தான் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து நடுவரிடம் இதனை டேத் பாலாக அறிவிக்க வேண்டும் என்று கோரினர்.

விதிப்படி சரியா

விதிப்படி சரியா

ஆனால், இதனையும் ஏற்க மறுத்த நடுவர்கள், அதனை பைஸ் என்று அறிவித்தனர், இது ஆட்டத்தில் இந்தியாவுக்கு கூடுதல் சாதகமாக மாறியது. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது ஃப்ரி ஹிட் என்பதால், அது அவுட் இல்லை. மேலும் ரன் அவுட் செய்யும் போது பந்து ஸ்டம்பில் பட்டு சென்றால் ரன்கள் ஓடும் போது , அது பைஸ் என்று அறிவிக்கப்படும். அந்த விதியை வைத்து தான் இதற்கும் பைஸ் வழங்கப்பட்டது, இதனால் இது தவறு இல்லை.

Story first published: Sunday, October 23, 2022, 20:25 [IST]
Other articles published on Oct 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+