Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாபர் அசாம் மிகப் பெரிய தவறு செய்கிறார்.. ரோகித்தை பார்த்து திருந்துங்கள்.. முன்னாள் கேப்டன் தடாலடி

மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று உள்ள நிலையில், பாகிஸ்தான் அணி அமெரிக்காவிடம் தோல்வியை தழுவி முதல் சுற்றில் இருந்து வெளியேறியது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் அந்த நாட்டு வீரர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

மேலும் பாபர் அசாம் கேப்டன்சியில் பாகிஸ்தான் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்ற விமர்சனமும் இருந்துள்ளது. இந்த நிலையில் முன்னாள் கேப்டன் ரசித் லதீப் பாபர் அசாமை கடுமையாக சாடியிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கடந்த முறை ஐம்பது ஓவர் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற்றது.

t20 cricket babar azam rohit sharma

இதில் நாம் நினைத்தது படி எதுவுமே நடக்கவில்லை. இதன் மூலம் பாபர் அசாமை கேப்டன் பகுதியில் இருந்து நீக்கினார்கள். அதன்பிறகு ஷாகின் அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள முன்வந்தார். தற்போது மீண்டும் பாபர் அசாம் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் மூலம் பாபர் அசாம் மிகவும் வீக்கான கேப்டனாக மாறிவிட்டார். யார் அணியை தலைமை தாங்க வருகிறார்களோ, அவர்களுக்கு தங்கள் மீது நம்பிக்கை இருக்க வேண்டும்.

என்னைக் கேட்டால் பாபர் மீண்டும் கேப்டன் பதவிக்கு வர ஒப்புக்கொண்டது அவர் செய்த மிகப்பெரிய தவறாக நினைக்கின்றேன். தொடர்ந்து பாபர் கேப்டன் பதவியில் நீடிப்பது நிச்சயம் அவர் செய்து கொண்டிருக்கும் மிகப்பெரிய தவறாகத்தான் இது அமையும். பாகிஸ்தான் அணி நீண்ட நாட்கள் கழித்து ஒரு மிகப்பெரிய திறமை வாய்ந்த பேட்ஸ்மேனை கண்டுபிடித்து இருக்கிறது. அவர் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டுமே தவிர இது போன்ற அரசியலில் ஈடுபடக்கூடாது.

ரோகித் சர்மாவையும் விராட் கோலியும் பார்த்தாவது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் திருந்த வேண்டும். கோலியும், ரோகித் சர்மாவும் இதற்கு முன்பு எப்படி விளையாடிக் கொண்டிருந்தார்கள். தற்போது ரோகித் அப்படியே டி20 கிரிக்கெட்டில் தலைக்கீழ் மாறி அபாரமாக விளையாட ஆரம்பித்து விட்டார். ரோகித் சர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் 130, 140 என்று அளவில் தான் இருக்கும். தற்போது அது 160 என்ற அளவில் உயர்ந்திருக்கிறது.

இதே போல் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட்டும் தற்போது அதிகரித்து இருக்கிறது. இந்த இரண்டு வீரர்களால் தங்களுடைய ஆட்டத்தை மாற்றிக் கொள்ள முடியும் என்றால் மற்ற வீரர்களாலும் முடியும் தானே? பாபர் அசாமும், முகமது ரிஸ்வானும் குறைந்தது 5 போட்டிகளில் தங்களுடைய டி20 கிரிக்கெட் ஆட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். அப்படி அவர்களால் முடியவில்லை என்றால் இனி t20 அணியில் இருவரும் இடம்பெறவே கூடாது என்று ரசித் லதீப் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, July 5, 2024, 17:20 [IST]
Other articles published on Jul 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+