For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே அணியில் களமிறங்கும் பாபர் அசாம், சூர்யகுமார், பும்ரா.. குஷியில் ரசிகர்கள்..எப்படினு இதை பாருங்க!

மும்பை : இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடர்களில் மோதி கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. இரண்டு அணிகளுமே ஐசிசி தொடர்களில் மட்டும்தான் மோதி கொள்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இரண்டு அணிகளும் டெஸ்ட் போட்டிகளில் கடைசியாக 2007 எட்டாம் ஆண்டு தான் விளையாடியது.

அதன் பிறகு எந்த ஒரு டெஸ்ட் போட்டியும் இரு அணிகளுக்கு இடையே நடைபெறவில்லை. தற்போது இந்திய அணியில் இசாந்த் சர்மாவை தவிர வேறு எந்த ஒரு வீரரும் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியதில்லை.

cricket babar azam jasprit bumrah suryakumar afro asia cup

ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சிறந்த வீரர்களுக்குமே இதை கதிதான். இந்த நிலையில் பாபர் அசாம், இசாந்த் சர்மா சூரியகுமார் யாதவ் ஆகியோர் ஒரே அணியில் விளையாடினால் எவ்வாறு இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். கேட்கவே செம குஷியாக இருக்கிறது அல்லவா? ஆம் இப்படி ஒரு சூழல் நிச்சயம் நடக்கப் போகிறது.

அது எப்படி என்று தற்போது பார்க்கலாம். ஆஃப்ரோ ஏசியா கப் என்ற கிரிக்கெட் தொடர் கடந்த 2005 மற்றும் 2007 ஆம் ஆண்டு நடைபெற்றது .அதில் ஆசிய கண்டத்தை சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம்,இலங்கை ஆகிய அணிகளை சேர்ந்த சிறந்த வீரர்கள் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார்கள். இதேபோன்று தென்னாப்பிரிக்கா, ஜிம்பாவே கென்யா ஆகிய நாடுகளில் இருந்து சிறந்த வீரர்கள் ஒரு அணியாக விளையாடுவார்கள்.

இப்படி இரண்டு அணிகளும் கடந்த 2005 ஆம் ஆண்டு மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடினர். இந்த நிலையில் 2007 ஆம் ஆண்டு பிறகு இந்த தொடர் நடைபெறுவதில்லை. இந்த சூழலில் ஆப்ரோ ஏசியா கோப்பையை மீண்டும் டி20 போட்டிகளாக 2023 ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டது. அப்போது இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அது வெற்றியில் முடியவில்லை

தற்போது ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் சுமோத் தாமோதர் இந்த தொடரை மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தற்போது உறுதிப்படுத்தி இருக்கிறார். 2023 ஆம் ஆண்டு இந்தத் தொடரை நடத்த நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். ஆனால் அது முடியாமல் போனது. தற்போது அதை நினைத்து நாங்கள் வருத்தம் அடைகின்றோம். தற்போது இந்த தொடரை நடத்த அனைத்து சாத்தியக்கூறுகளும் நடைபெற்று வருகிறது என்று தாமோதர் கூறியிருக்கிறார்.

டி20 வடிவில் இந்த போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இது சாத்தியமானால் ஆசிய அணியில் டி20 போட்டியில் சிறந்த நாயகன்கள் சூரிய குமார், பாபர் அசாம், முகமது ரிஸ்வான், பும்ரா, ஷாகின் அப்ரிடி ரஷீத் கான் ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் எல்லாம் இடம் பெற வாய்ப்பு இருக்கிறது. பாகிஸ்தான் நட்சத்திரங்களும் இந்திய நட்சத்திரங்களும் ஒரே அணியில் இணைந்து விளையாட்டினால் அது நிச்சயம் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும்.

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை பெரியதாக மாறியதை அடித்து பாகிஸ்தான் வீரர்களை ஐபிஎல் நிர்வாகிகள் ஓரங்கட்ட தொடங்கினர். இதனால் பாகிஸ்தான் அணியினர் இந்தியா வந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஆப்ரோ ஏசியா கோப்பை போட்டி நடைபெற்றால் பாபர் அசாமும், பும்ராவும் ஒரே அணியில் இணைந்து விளையாட கூடிய சூழல் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, September 11, 2024, 19:01 [IST]
Other articles published on Sep 11, 2024
English summary
Babar azam Jasprit Bumrah and Suryakumar might Plays in same Team- Here it is Full details ஒரே அணியில் களமிறங்கும் பாபர் அசாம், சூர்யகுமார், பும்ரா.. குஷியில் ரசிகர்கள்..எப்படினு இதை பாருங்க!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+