Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன மனுசங்க பாபர் அசாம்.. தோல்விக்கு பிறகு பாக். டிரஸிங் ரூம்மில் நடந்தது என்ன? வீடியோ

மெல்போர்ன் : 2022 டி20 உலககோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் கடந்த ஆண்டு பாகிஸ்தானிடம் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பழித்தீர்த்து கொண்டது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது.

அந்த ஓவரை வீசிய பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் முகமது நவாஸ், ஒரு நோ பால், 2 wide , ஒரு சிக்சரை கொடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.

பாபர் அசாம் தவறு

பாபர் அசாம் தவறு

முகமது நவாசின் இந்த செயல்பாடு, பாகிஸ்தான் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடைசி ஓவரை சுழற்பந்தவீச்சாளருக்கு கொடுத்தது ஏன் என்று பாபர் அசாமை நோக்கி கேள்விகளும் எழத் தொடங்கின. இதனையடுத்து, பாகிஸ்தான் வீரர்கள், டிரஸிங் ரூமில் சென்று, ஒவ்வொருவரும், ஒரு இடத்தில் சோகமாக அமர்ந்து கொண்டு இருந்தனர்.

மேத்தீவ் ஹைடன் பேச்சு

மேத்தீவ் ஹைடன் பேச்சு

அப்போது பேசிய பாகிஸ்தான் அணியின் மெண்டர் மேத்தீவ் ஹைடன், இது ஒரு சிறந்த போட்டியாக இருந்தது. இந்தப் போட்டி சரியான சவாலாக இருந்தது. ஆனால் முடிவு நமக்கு சாதகமாக அமையவில்லை. ஆனால் இந்த தோல்வி நமது பயணத்தை நிறுத்தாது. இந்த தோலவியை இங்கே விட்டு நகர்ந்து செல்லுங்கள் என்று கூறினார்.

பாபர் அசாம் அறிவுரை

பாபர் அசாம் அறிவுரை

இதனைத் தொடர்ந்து பேசிய பாபர் அசாம், சகோதரர்களே இது சிறந்த போட்டியாக இருந்தது. நாம் இந்த போட்டிக்காக பல முயற்சிகளை செய்தோம். ஆனால் சில தவறுகளும் நிகழ்ந்தது. அந்த தவறிலிருந்து நாம் படத்தை கற்று கொள்ள வேண்டுமே தவிர, விழுந்துவிட கூடாது. இது பெரிய தொடர். இன்னும் நமக்கு நிறைய போட்டிகள் இருக்கிறது. நாம் இவரால் தோற்றோம் என்று யாரும் யாரையும் கை காட்ட கூடாது.

நெகிழ்ச்சி பேச்சு

நாம் ஒரு அணியாக தான் தோற்றோம். வென்றால் ஒரு அணியாக தான் வெல்வோம். நவாஸ், நீங்கள் ஒரு சாம்பியன் வீரர். கவலைப்பட தேவையில்லை. இன்னும் நீங்கள் எனக்காக நிறைய போட்டிகளை வென்று தரப்போகிறீர்கள்.உங்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நெருக்கடியான போட்டியை கடைசி வரை கொண்டு சென்றீர்கள். இந்தப் போட்டியில் நாம் பாராட்டத்தக்க விசயங்களை செய்ததோம். அந்த நல்ல விசயங்களை பாருங்கள். தவறுகளை திருத்தி கொள்ள முயற்சி செய்வோம் என்று பேசி ஊக்கம் அளித்தார்.

Story first published: Monday, October 24, 2022, 11:45 [IST]
Other articles published on Oct 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+