Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் டெண்டுல்கர் உடன் பாபர் அசாமை ஒப்பிடுவதா? நியாயம் வேண்டாமா? பாகிஸ்தானில் கிளம்பிய எதிர்ப்பு

Babar azam : பிரபல பாகிஸ்தான் வீரர் பாபர அசாமை சச்சின், லாராவுடன் ஒப்பிட்டதற்கு அந்நாட்டு கிரிக்கெட் விமர்சகர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். தற்போது பாகிஸ்தானில் பிஎஸ்எல் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் பாபர் அசாம் சிறப்பாக விளையாடி வருகிறார்.

அண்மையில் சதம் அடித்து அசத்தினார். அப்போது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேக பந்துவீச்சாளர் வசிம் அக்ரம், பாபர் அசாமை பாராட்டும் போது சச்சின் மற்றும் பிரைன் லாரா ஆகியோரின் பெயரை குறிப்பிட்டு பேசினார்.

Babar azam vs sachin tendulkar comparsion - Pakistan youtuber hit backs wasim akram

அதில் பாபர் அசாம் மிகச்சிறந்த வீரராக இருக்கிறார். தற்போது உள்ள உலக கிரிக்கெட்டில் முதல் சிறந்த மூன்று பேட்ஸ்மேன்களில் பாபர் அசாமும் இருப்பார். அவருடைய கிரிக்கெட் ஷாட்கள் எல்லாம் தெளிவாக இருக்கிறது. தற்போது அதிரடியாகவும் ஆடுகிறார்.
சச்சின்,பிரைன் லாரா போன்ற வீரர்களுக்கு எல்லாம் பந்து வீசுவது மிகவும் கடினம்.

ஏனென்றால் அவர்கள் நல்ல பந்தை கூட சிறப்பாக ஆடி ரன்கள் சேர்ப்பார்கள். இதன் மூலம் அவர்களை ஆட்டம் இழக்க வைக்கும் வாய்ப்பு குறைவு என்று வசீம் அக்ரம் பாபர் அசாமை ஒப்பிட்டு பேசினார். இதற்கு பிரபல பாகிஸ்தான் யூடியூபர் ஹபீப் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். முதலில் பாபர் அசாமை விராட் கோலி உடன் ஒப்பிட்டு பேசினீர்கள்.

அதன் பிறகு கில்லுடன் ஒப்பிட்டு பேசினீர்கள். தற்போது நேரடியாக சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு பேசுகிறீர்கள். நீங்கள் சச்சின் விளையாடியதை எல்லாம் பார்த்ததே கிடையாதா. கொஞ்சமாவது கிரிக்கெட் கடவுள் மீது பயம் கொள்ளுங்கள். இதுபோன்ற கேள்வியை என்னிடம் யாரும் கேட்டு விடாதீர்கள்.

நான் ஒரு கிரிக்கெட் வெறியன். இந்த கேள்வியை கேட்பது தவறு. சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான் உடன் பாபர் அசாமை எல்லாம் ஒப்பிடுவது நியாயம்தானா என்று அவர் கூறியிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் பாபர் அசாம்க்கு எதிராகவும் சச்சின் டெண்டுல்கருக்கு ஆதரவாகவும் பேசியிருக்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Story first published: Wednesday, March 6, 2024, 8:31 [IST]
Other articles published on Mar 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+