Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே வீரர்களோட அடுத்தடுத்த பார்ட்னர்ஷிப்... சிறப்பான துவக்கத்தை கொடுக்கும் துவக்க வீரர்கள்!

மும்பை : ஐபிஎல் 2021 தொடரின் 19வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

அணியின் துவக்க வீரர்கள் அதிரடி பார்ட்னர்ஷிப்பில் ரன்களை குவித்து சிறப்பான அடித்தளத்தை அணிக்கு அமைத்தனர்.

19வது போட்டி

19வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 19வது போட்டி சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி இடையில் மும்பையில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து சிஎஸ்கே விளையாடி வருகிறது. துவக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டூ பிளசிஸ் களமிறங்கி விளையாடினர்.

இம்ரான் தஹிரும் இணைப்பு

இம்ரான் தஹிரும் இணைப்பு

மொயீன் அலி மற்றும் லுங்கி நிகிடி இன்றைய போட்டியில் விளையாடாத நிலையில், பிராவோ மற்றும் இம்ரான் தஹிர் சிஎஸ்கேவில் இணைந்துள்ளனர். கடந்த போட்டியின்போது மொயீன் அலிக்கு காயம் ஏற்பட்டதையடுத்து அவருக்கு பதிலாக யார் விளையாடுவார்கள் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

ருதுராஜ் -டூ பிளசிஸ் பார்ட்னர்ஷிப்

ருதுராஜ் -டூ பிளசிஸ் பார்ட்னர்ஷிப்

இன்றைய போட்டியில் மட்டுமின்றி கடந்த போட்டியிலும் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டூ பிளசிஸ் துவக்க வீரர்களாக களமிறங்கி விளையாடினார்கள். கடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ருதுராஜ் 42 பந்துகளில் 64 ரன்களும் டூ பிளசிஸ் 60 பந்துகளில் 95 ரன்களும் அடித்திருந்தனர். பவர்ப்ளேவில் இவர்களின் பார்ட்னர்ஷிப் அணிக்கு சிறப்பானதாக அமைந்தது.

தொடர் பார்ட்னர்ஷிப்

தொடர் பார்ட்னர்ஷிப்

இதேபோல இன்றைய போட்டியிலும் இவர்கள் இருவரும் இணைந்து பவர்ப்ளேவில் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். பவர்ப்ளேவில் இருவரும் 51 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை இன்றைய போட்டியில் அமைத்திருந்த நிலையில் சஹல் பந்துவீச்சில் ருதுராஜ் 25 பந்துகளில் 33 ரன்களை அடித்திருந்தபோது அவுட்டானார்.

அடுத்தடுத்து அவுட்

அடுத்தடுத்து அவுட்

முதல் 3 போட்டிகளில் சொதப்பிய ருதுராஜ் கெய்க்வாட் கடந்த இரு போட்டிகளில் சிறப்பான பார்ட்னர்ஷிப்பில் ரன்களை அடித்துள்ளார். கடந்த 2020 சீசனில் அவர் சிறப்பான போட்டிகளை தந்த நிலையில் இந்த சீசனில் தற்போதுதான் அவரது சிறப்பான ஆட்டம் துவங்கியுள்ளது. இதனிடையே இன்றைய போட்டியில் சிறப்பாக ஆடிவந்த பாப் டூ பிளசிசும் 50 ரன்களில் ஹர்ஷல் படேல் பௌலிங்கில் அவுட்டானார்.

Story first published: Sunday, April 25, 2021, 20:46 [IST]
Other articles published on Apr 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+