For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“எப்போதும் இதே வேலை தான்..” கோலியுடன் அப்படி என்னதான் பிரச்சினை.. பேர்ஸ்டோ தந்த விளக்கம்!

பெர்மிங்கம்: விராட் கோலியுடன் நடந்த கார சார சண்டை குறித்து இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதி வரும் 5வது டெஸ்ட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை சேர்த்த சூழலில், இங்கிலாந்து அணி 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

கோலி சண்டை

கோலி சண்டை

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 83 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த போது, ஜானி பேர்ஸ்டோவின் அட்டகாச சதம் மீட்டுக் கொண்டுவந்தது. அந்த சதத்திற்கு முக்கிய காரணம் கோலி எனக் கூறலாம். ஆட்டத்தின் 3வது நாளில் விராட் கோலி மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோரிடையே சண்டை ஏற்பட்டது. இருவரும் கடுமையான வார்த்தைகளை பரிமாறிக்கொண்டனர்.

குவியும் விமர்சனம்

குவியும் விமர்சனம்

இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸின் போது, பேர்ஸ்டோ ஏதோ கூற, விராட் கோலி அதற்கு பதிலடி கொடுக்க இறங்கினார். பின்னர் 2 நடுவர்கள் அங்கே சென்று இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதுற்காக கோலி மீதும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

பேர்ஸ்டோவின் விளக்கம்

பேர்ஸ்டோவின் விளக்கம்

இந்நிலையில் இருவருக்குள் என்ன பிரச்சினை என பேரிஸ்டோ பேசியுள்ளார். அதில், எங்களுக்குள் எந்த சண்டையும் கிடையாது. சுமார் 10 ஆண்டுகளாக இருவரும் எதிர் எதிராக விளையாடி வருகிறோம். அதில் ஒரு சிறிய விரிசல் வந்துள்ளது அவ்வளவுதான். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் 2 அணிகள் தீவிரமாக போராடுவோம். அவரவர் அணியின் வெற்றிக்காக போராடுவோம்.

விருந்துக்கு அழைப்பு

விருந்துக்கு அழைப்பு

அந்த வகையில் நேற்று நடைபெற்றதும் அதுபோன்ற ஒரு போராட்டம் தான். இது எப்போதுமே நடைபெறும். ஆட்டத்தில் இதெல்லாம் சகஜமான ஒன்று. இதற்காக அவரும் நானும் இனி எதிரிகள் என்றெல்லாம் கிடையாது. நிச்சயமாக அவரை இரவு விருந்துக்கெல்லாம் அழைக்கதான் போகிறேன் என வேடிக்கையாக பேர்ஸ்டோ பதிலளித்தார்.

Story first published: Monday, July 4, 2022, 14:31 [IST]
Other articles published on Jul 4, 2022
English summary
Bairstow fights with Virat kohli ( இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் ) இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலியுடன் என்ன சண்டை என்பது குறித்து பேர்ஸ்டோ பேசியுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+