BAN vs AFG - புலிக்குட்டினா சும்மா வா? அவமானத்திற்கு பதிலடி தந்த வங்கதேசம்.. ஆப்கானிஸ்தான் தோல்வி
ஷார்ஜா : ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக வங்கதேச அணி சார்ஜாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதை அடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் டன்சித் ஹசின் 22 ரன்களும், சவுமியா சர்க்கார் 35 ரன்களும் மெஹதி ஹசன் 22 ரன்களும் எடுத்தனர்.

இன்னும் கேப்டன் நஜ்முல் ஹுசைன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 76 ரன்கள் சேர்த்தார். இறுதியில் ஜேக்கர் அலி 32 ரன்களும் நசும் அகமத் 25 ரன்களும் எடுக்க வங்கதேச அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்தது. ரஷீத் கான், கசான்பர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதை அடுத்து 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.
இதில் குர்பாஸ் 2 ரன்களின் ஆட்டமிழக்க ஷேதீக்குல்லாஹ் அட்டல் 39 ரன்களும், ரஹ்மத்ஷா 52 ரன்களும் எடுத்தனர். பெரும் எதிர்பார்க்கப்பட்ட அஸ்மத்துல்லா உமர்சாய் டக் அவுட் ஆக, கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிதி 17 ரன்கள் எடுத்தார். குலாப்தீன் நைப் 26 ரன்களும் முகமது நபி 17 ரன்களும் ரஷித் கான் 16 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 43.3 ஓவர்களில் 184 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளுமே எடுத்தது. பந்துவீச்சு தரப்பில் நசும் அகமத் 28 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.சிஎஸ்கே வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் இரண்டு விக்கெட்டுகளும் மெஹந்தி ஹசன் இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினார். இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடர் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கு சமநிலையில் உள்ளது. இதனை அடுத்து தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி வரும் திங்கட்கிழமை இந்திய நேரப்படி மதியம் மூன்று முப்பது மணிக்கு தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications