20 ஓவர் தொடரையும் வென்றது வங்கதேசம்!
Recommended Video

20 ஓவர் தொடரையும் வென்றது வங்கதேசம்!- வீடியோ
லாடர்ஹில்: வங்கதேச அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என்று கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் வென்று சாதனை படைத்தது. அதன் பின்னர் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸும், இரண்டாவது போட்டியில் வங்கதேசம் அணியும் வெற்றி பெற்றது. இந்தநிலையில் தொடரின் முடிவை நிர்ணயிக்கும் கடைசி போட்டி ஆகஸ்ட் 6ஆம் தேதி லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. லிட்டன் தாஸ் அபாரமாக விளையாடி 32 பந்துகளில் 61 ரன்களை எடுத்தார். இது 20 ஓவர் போட்டிகளில் அவர் அடிக்கும் முதல் அரைசதம் ஆகும். மஹ்மதுல்லா இறுதி கட்டத்தில் 32 ரன்களை எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் பிராத்வைட் மற்றும் கீமோ பால் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.
அதனை தொடர்ந்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 17.1 ஓவர்களில் 135 ரன்களை எடுத்தபோது மழை குறுக்கிட்டது. அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேச அணியை விட 19 ரன்கள் குறைவாக இருந்தது டக் ஒர்த் லெவிஸ் முறைப்படி. தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் போட்டி நடுவர்கள் வங்கதேச அணி 19 ரன்கள் வெற்றி பெற்றதாக அறிவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரஸெல் அபாரமாக ஆடி 21 பந்துகளில் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது. இதன்மூலம் குறிப்பிட்ட ஓவர் போட்டிகளில் வங்கதேச அணி தனது ஆளுமையை நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Story first published: Tuesday, August 7, 2018, 9:59 [IST]
Other articles published on Aug 7, 2018


Click it and Unblock the Notifications