இந்தியா நாளை நொறுங்கி விடும்.. லிட்டன் தாஸ் திமிர் பேச்சு..ராகுலின் ஒரு தவறால் அவமானப்படும் இந்தியா
டாக்கா : வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 227 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து களமிறிங்கிய இந்திய அணியில் ரிஷப் பந்த் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக விளையாட 314 ரன்கள் அடித்தது.
இதை அடுத்து 87 ரன்கள் பின் தங்கிய வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 231 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது.
யாரும் எதிர்பாராத வகையில் சுப்மான்கில் ஏழு ரன்களிலும் கே எல் ராகுல் இரண்டு ரன்களிலும் முதல் டெஸ்டில் சதம் விளாச புஜாரா இந்த ஆட்டத்தில் ஆறு ரன்கள் அடுத்தடுத்த ஆட்டம் இழந்தனர்.

தடுமாறிய இந்தியா
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 22 பந்துகளை எதிர்கொண்டு வெறும் ஒரு ரன் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் இந்திய அணி 37 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முன்வரிசையில் இறங்கிய அக்சர்பட்டில் மட்டும் மூன்று பவுண்டர்களை அடித்து 26 ரன்கள் சேர்த்தார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 45 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது.

இன்னும் 100 ரன்கள்
நான்காவது நாள் ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு 100 ரன்கள் தேவைப்படும் நிலையில் வங்கதேசம் வெற்றிக்கு ஆறு விக்கெட் தான் தேவைப்படுகிறது. முன்னணி வீரர்கள் அனைவரும் ஆட்டம் இழந்த நிலையில் ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் அஸ்வின் மட்டும் தான் இந்திய அணிக்காக இருக்கிறார்கள். ஆடுகளம் சுழற் பந்துவீச்சு சாதகமாக மாறிவிட்டதால் 100 ரன்களை அடிப்பது என்பது மிகவும் கடினம். இந்த நிலையில் வங்கதேசத்தின் செயல்பாடு குறித்து பேசிய லிட்டன் தாஸ் நாங்கள் வெற்றியை நோக்கி இருக்கிறோம்.

இந்தியா உடைந்து விடும்
இந்த கட்டத்தில் நாங்கள் தான் முன்னிலையில் இருக்கின்றோம். நாளை எங்களுக்கு வெற்றி சாத்தியம் தான். ஆட்டம் தொடக்கத்திலே இரண்டு விக்கெட் வீழ்த்தினால் அவர்களுக்கு நெருக்கடி உருவாகும். நாங்கள் இந்தியாவை வீழ்த்த ஒரு நல்ல திட்டத்துடன் வருவோம். நிச்சயமாக நாளை இந்திய அணி உடைந்து விடும். அதுதான் எங்களுடைய குறிக்கோள். இந்த போட்டியை நாங்கள் நிச்சயம் வெல்வோம். கடைசி இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது மிகவும் கடினம்.நாங்கள் 220 ரன்கள் டார்கெட் வைக்க விரும்பினோம்.

பெரிய சாதனை
ஆனால் அது முடியவில்லை. தற்போது அவர்கள் மேலும் 100 ரன்கள் அடிக்க வேண்டும். அது நிச்சயம் கடினம்தான். இந்த இலக்கு நாங்கள் வெற்றி பெற போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன். ஆடுகளம் எங்களுக்கு சாதகமாக செயல்படுகிறது. ரிஷப் பண்ட் நாளை அதிரடியாக விளையாடினால் சூழ்நிலை மாற வாய்ப்பு இருக்கிறது. இந்தியா போன்ற நம்பர் ஒன் டெஸ்ட் அணியை வீழ்த்தினால் அது நிச்சயமாக நாங்கள் செய்யும் பெரிய சாதனைதான்.

ஒரே வழி
மெஹதி ஹசன் பேட்டிங் செய்யும்போது நான் அவரிடம் சொன்னது ஒன்றே ஒன்றுதான். இந்த ஆடுகளத்தில் மெதுவாக விளையாடி ரன் சேர்க்க முடியாது.அவ்வளவு நேரமும் தாக்குப் பிடிக்க முடியாது. நீங்கள் அதிரடியாக ஆடினால் மட்டுமே ரன் சேர்க்க முடியும் என்று கூறினேன். இந்த போட்டி நிச்சயமாக சமனில் முடியாது. ஒன்று நாங்கள் ஜெயிக்க வேண்டும், இல்லை இந்தியா ஜெயிக்க வேண்டும். ஐந்தாவது நாள் இந்த டெஸ்ட் போட்டி போகாதும் நாளை நாங்கள் இந்திய பேட்ஸ்மேன்களை அட்டாக் செய்ய உள்ளோம். நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம் என நம்புகிறேன் என்று லிட்டன் டாஸ் கூறினார்.


Click it and Unblock the Notifications