Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியை மட்டும் ஸ்லேஜிங் பண்ணிடாதீங்க.. அப்புறம் செத்தோம்.. வங்கதேச வீரர் எச்சரிக்கை

புனே : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்திய அணி தங்களுடைய நான்காவது லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தில் எதிர்கொள்ள உள்ளது. விளையாடிய மூன்று போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடர்ந்து நான்காவது வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

விராட் கோலி கடந்த 2015 ஆம் ஆண்டு உலக கோப்பையில் தான் சதம் அடித்தார். அதன் பிறகு அவருக்கு சதம் அடிக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. இதனால் வங்கதேசத்துக்கு எதிராக தன்னுடைய உலகக்கோப்பை சதம் வரட்சியை விராட் கோலி முடிவுக்கு கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bangladesh cricketer Mushfiqur rahim says he will never sledge virat kohli

இந்த நிலையில் வங்கதேச வீரர்கள் எப்போதுமே எதிரணி வீரர்களை வெறுப்பேற்றும் வகையில் செயல்படுவார்கள். ஆனால் விராட் கோலியை மட்டும் ஸ்லேஜிங் செய்யக்கூடாது என அந்த அணியின் முசுபிகுர் ரஹீம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், சில பேட்ஸ்மேன்களை நாம் ஸ்லேஜிங் செய்யக்கூடாது.

ஏனென்றால் சில வீரர்களுக்கு ஸ்லேஜிங் செய்யப்படுவது மிகவும் பிடிக்கும். அப்போதுதான் அவர்கள் உத்வேகம் அதிகரித்து அபாரமாக விளையாட தொடங்கி விடுவார்கள். எனவே நான் விராட் கோலி எப்போதுமே இதுவரை ஸ்லேஜிங்கை செய்தது கிடையாது. ஏனென்றால் அவரும் கூடுதல் உத்வேகம் வந்து ரன் அடிக்க ஆரம்பித்து விடுவார். இதனால் என்னுடைய பந்துவீச்சாளர்களுக்கு நான் கூறுவது ஒன்றே ஒன்றுதான்.

கோலியை ஸ்லேஜிங் செய்யாதீர்கள். முடிந்தால் விரைவாக ஆட்டமிழக்க வையுங்கள். ஆனால் நான் விராட் கோலிக்கு எதிராக பேட்டிங் செய்யும்போது அவர் என்னை வெறுப்பேற்றும் வகையில் செய்வார். ஏன் என்றால் விராட் கோலிக்கு சவாலாக இருப்பது மிகவும் பிடிக்கும். அவருக்கு கிரிக்கெட் போட்டிகளில் தோற்கவே பிடிக்காது. இதனால் விராட் கோலியுடன் நான் களத்தில் எதிர்கொள்வதை மிகவும் விரும்புவேன்.

விராட் கோலியையும் இந்தியாவையும் எதிர்கொள்ளும் போது கடும் சவால்கள் நமக்கு காத்திருக்கும் என்று முஸ்பிகுர் ரஹீம் கூறினார். இதுவரை சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இரு அணிகளும் மோதியுள்ள நிலையில் இந்தியா 31 போட்டிகள் வெற்றியும் வங்கதேசம் எட்டு போட்டியில் வெற்றியும் பெற்று இருக்கிறது. உலகக்கோப்பையில் இதுவரை நான்கு முறை இரு அணிகளும் மோதி இருக்கிறது. இதில் இந்தியா மூன்று முறையும் வங்கதேசம் ஒரு முறையும் வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, October 19, 2023, 0:24 [IST]
Other articles published on Oct 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+