For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தமீம் இக்பால் பற்றி கேள்வி கேட்டால் எழுந்து சென்றுவிடுவேன்..செய்தியாளர் சந்திப்பில் லிட்டன்தாஸ் பரபர

டாக்கா : வங்கதேச கிரிக்கெட்டில் தற்போது பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் மூன்று மாதங்கள் கூட இல்லாத நிலையில் கேப்டன் பொறுப்பை வகித்து வந்த தமீம் இக்பால் அந்தப் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார்.

மேலும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற லிட்டன் தாஸ், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி தோல்வியை தழுவிய நிலையில் இந்த முடிவை அவர் அறிவித்தார்.

Bangladesh interim captain Litton das angry response over tamim iqbal question

பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது தமீம் இக்பால் பலமுறை கண்ணீர் மல்க அழுதார். இந்த நிலையில் தற்காலிக கேப்டனாக லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். நாளை இரண்டாவது ஒரு நாள் போட்டி நடைபெறும் நிலையில் இன்று செய்தியாளர்களை லிட்டன் தாஸ் சந்தித்தார். அப்போது தமீம் இக்பால் குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டது. இதனால் கடுப்பான லிட்டன் தாஸ், நான் நாளை நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டி குறித்து பேச வந்திருக்கிறேன்.

ஆனால் நீங்கள் தமீம் இக்பால் பற்றி கேள்வி கேட்கிறீர்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டியது கிரிக்கெட் வாரிய தலைவரும் பயிற்சியாளரும் தான். இதற்கு நான் பதில் கூற வேண்டியது இல்லை. நீங்கள் தொடர்ந்து கேள்வியை கேட்டால் நான் செய்தியாளர் சந்திப்பில் இருந்து சென்று விடுவேன் என்று லிட்டன் தாஸ் காட்டமாக பதிலளித்தார். மேலும் இது குறித்து பேசிய அவர் தமீம் இக்பால் ஓய்வு பெறுவது குறித்து எங்களுக்கு நேற்று மதியம் ஒரு மணிக்கு தான் தெரியும்.

நாங்கள் அவருடன் பல போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு முடிவு எடுப்பார் என்று எங்களுக்கு தெரியாது. அவர் எங்களுக்கு மூத்த சகோதரர் போன்றவர். இதனால் அவர் எடுக்கும் முடிவுக்கு அணியின் மற்ற வீரர்களும் மரியாதை கொடுப்போம். இதேபோல் நீங்களும் அவருடைய முடிவுக்கு மரியாதை கொடுங்கள். தமீம் இக்பாலை நாங்கள் மிஸ் செய்வோமா என்று சொல்வது கடினம்.

ஏனென்றால் இன்று நான் இங்கு இருக்கிறேன். நாளை எனக்கு பதில் வேறு யாராவது வருவார்கள்.சர்வதேச கிரிக்கெட்டில் யாரும் யாரையும் மிஸ் செய்ய மாட்டார்கள். காரணம் புது வீரர்கள் அணிக்குள் வந்து கொண்டே இருப்பார்கள். இது காலம் காலமாக நடப்பது தான். தற்போது தமீம் இக்பால் அணியில் இல்லாததால் அவர் குறித்து பேசுவது பயனற்றது.

அணியை விட்டு சென்றவர் குறித்து தொடர்ந்து பேசுவதால் எந்தப் பயனும் கிடையாது. இதனால் இனி எதிர்காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும். அணியை எப்படி வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்வோம் என்று லிட்டன் தாஸ் பேட்டியில் கூறியிருக்கிறார்.

Story first published: Friday, July 7, 2023, 17:57 [IST]
Other articles published on Jul 7, 2023
English summary
Bangladesh interim captain Litton das angry response over tamim iqbal question தமீம் இக்பால் பற்றி கேள்வி கேட்டால் எழுந்து சென்றுவிடுவேன்..செய்தியாளர் சந்திப்பில் லிட்டன்தாஸ் பரபர
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+