
ஐபிஎல் ஏலம்
இன்று நடைபெறும் ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 1,114 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். அதில் 292 வீரர்கள் ஏலத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்காக சிறந்த திறமையான வீரர்களை ஏலம் எடுக்க அணிகள் தயாராகி வருகின்றன.

வெளிநாட்டு வீரர்கள்
ஐபிஎல் தொடரில் அதிகளவில் இந்திய வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டாலும் வெளிநாட்டு வீரர்களின் பங்கு மிக முக்கியமான ஒன்றாகவே உள்ளது. குறிப்பாக அணியின் கேப்டன்களாகவும் அவர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

பங்களாதேஷ் வீரர்கள்
இந்நிலையில் பங்களாதேஷ் வீரர்கள் ஐபிஎல் தொடர் முழுவதும் பங்கேற்க வாய்ப்புகள் இல்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் சகிப் அல் ஹசன் , முஸ்துவிசூர் ரஹ்மான், முகமதுல்லா ஆகிய நட்சத்திர வீரர்களை அணிகள் மிஸ் செய்ய போகின்றன.

நெஹ்ராவின் கணிப்பு
இந்தாண்டு ஏலத்தில் மேக்ஸ்வெல் அதிக தொகைக்கு செல்வார் என அனைவரும் கூறிய நிலையில், முன்னாள் வீரர் அஷிஷ் நெஹ்ரா மட்டும் சகிப் அல் ஹசன் தான் இந்தாண்டின் முக்கிய வீரராக இருப்பார் என தெரிவித்திருந்தார். ஆனால் அவரை தற்போது அணிகள் ஏலத்தில் எடுப்பதே கேள்விக்குறி ஆகியுள்ளது.


Click it and Unblock the Notifications