வெஸ்ட் இண்டீஸ் அணியை பழி தீர்த்தது வங்கதேசம்
Recommended Video

மே. இந்தியத் தீவுகள் எதிரான முதல் வெற்றியை பதிவு செய்தது வங்கதேசம்- வீடியோ
கயானா: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றது.
வங்கதேச அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கியுள்ளது.

நேற்று கயானாவில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி,வெஸ்ட் இண்டீஸ் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் அடைந்த தோல்விகளுக்கு பதிலடி கொடுத்தது.
முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் இரண்டாவது ஓவரில் தனது முதல் விக்கெட்டை இழந்தது. இதனை அடுத்து ஜோடி சேர்ந்த தமீம் இக்பால் மற்றும் சாகிப் அல் ஹசன் இணைந்து பொறுமையாக அணியின் ஸ்கோர் அதிகரிக்க செய்தனர்.
சிறப்பாக விளையாடிய சாகிப் 3 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அவர் 97 ரன்களில் அவுட் ஆனார். இவர்கள் இரண்டாவது விக்கெட்டிற்கு 208 ரன்களை சேர்த்தனர். அதன் பிறகு களமிறங்கிய சபீர் ரஹ்மான் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் முஷ்பிகுர் ரஹீம் அதிரடியாக ஆடி 30 ரன்களை குவித்தார். தமீம் இக்பால் கடைசிவரை வரை ஆட்டமிழக்காமல் 130 ரன்களை குவித்தார்.
வங்கதேசம் 50 ஓவர்கள் முடிவில் 279 ரன்களை குவித்தது. இதனை தொடர்ந்து 280 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்களை மட்டுமே எடுத்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. வங்கதேச கேப்டன் மோர்தசா அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கெய்ல் 40 ரன்களையும், ஹெட்மயேர் 52 ரன்களையும் குவித்தனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் வங்கதேச அணி தனது தோல்வி பாதையில் இருந்து வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் தமீம் இக்பால் மிக மெதுவாக சதம் அடித்த வங்கதேச வீரர் என்ற (மோசமான) சாதனையை படைத்தார்.
Story first published: Tuesday, July 24, 2018, 11:38 [IST]
Other articles published on Jul 24, 2018


Click it and Unblock the Notifications