Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெஸ்ட் இண்டீஸுக்கு இப்படி ஒரு சோதனையா.. ஒருநாள் தொடரை வென்றது வங்கதேசம்!

செயிண்ட் கிட்ஸ்: வங்கதேச அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. அதனை தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை வென்றது.

முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி போட்டி வார்னர் பார்க் ஸ்டேடியத்தில் சனிக்கிழமை (ஜூலை 28) நடைபெற்றது.

bangladesh wins odi series


டாஸில் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 301 ரன்களை குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் தமீம் இக்பால் அபாரமாக விளையாடி 103 ரன்களை எடுத்தார். இந்த தொடரில் அவர் அடிக்கும் இரண்டாவது சதம் இதுவாகும். கடைசி கட்டத்தில் மஹ்மதுல்லா அதிரடியாக ஆடி 67 ரன்களை குவித்தார்.

302 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 283 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. கிறிஸ் கெயில் 73 ரன்களையும், பவல் ஆட்டமிழக்காமல் 74 ரன்களையும் எடுத்தனர்.

வங்கதேசம் தரப்பில் மொர்தசா 2 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது தமீம் இக்பாலுக்கு வழங்கப்பட்டது.

2009ஆம் ஆண்டிற்கு பிறகு ஆசியா கண்டத்திற்கு வெளியே வங்கதேச அணி தொடரை வெல்வது இதுவே முதல் முறையாகும் என்பது இதில் சிறப்பானதாகும்.




Story first published: Monday, July 30, 2018, 15:07 [IST]
Other articles published on Jul 30, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+