Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மொத்தமாக மாறுகிறது ஐபிஎல்.. இளம் வீரர்களுக்கு கிடைத்த குட்நியூஸ்.. இனிதான் ஆட்டமே இருக்கு!

சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கான குறைந்தபட்ச ஏல தொகை ரூபாய் 1.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

2020 ஐபிஎல் தொடர் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த சீசனில் மிகவும் வலிமையான அணியாக இருந்த மும்பை அணி இதில் வெற்றிபெற்றது. முதல்முறையாக சிஎஸ்கே அணி இந்த முறை பிளே ஆப் செல்லவில்லை.

இந்த நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் ஏலம் நடக்க உள்ளது.

ஏலம்

ஏலம்

இந்த முறை பெரிய அளவில் ஏலம் நடக்காது. ஆனால் முக்கியமான வீரர்கள் அணி மாற வாய்ப்புள்ளது. ஐபிஎல்லில் இதுவரை விளையாடாத வெளிநாட்டு வீரர்கள் இந்த முறை விளையாட உள்ளனர். இளம் வீரர்கள் பலர் வாய்ப்பு பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

எப்படி

எப்படி

முக்கியமாக நியூசிலாந்து, இங்கிலாந்து அணியில் இருக்கும் வீரர்கள் ஐபிஎல் அணிக்கு வர வாய்ப்புள்ளது. மேத்யூ வேட் போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள், நியூசிலாந்து அணியை சேர்ந்த இளம் வீரர்கள் இந்த வருட ஏலத்தில் அதிக முக்கியத்துவம் பெறுவார்கள்.

மாற்றம்

மாற்றம்

சிஎஸ்கே போன்ற அணிகள் பல வீரர்களை வெளியே அனுப்பிவிட்டு மாற்று வீரர்களை அணிக்குள் கொண்டு வருவதற்கான திட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கான குறைந்தபட்ச ஏல தொகை ரூபாய் 1.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு வீரரை அணியில் எடுக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் அவருக்கு 1.5 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும்.

அதிகம்

அதிகம்

முன்பு குறைந்தபட்ச தொகை ரூபாய் 20 லட்சமாக இருந்தது. தற்போது இதை 1.5 கோடியாக உயர்த்தி உள்ளனர். இது வெளிநாட்டு வீரர்கள் பலர் ஐபிஎல்லில் ஆர்வம் செலுத்த வழிவகுக்கும். அதேபோல் இளம் வீரர்கள் போதிய ஊதியம் பெறுவதற்கும் இந்த குறைந்த பட்சம் தொகை உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, January 5, 2021, 16:38 [IST]
Other articles published on Jan 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+