Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல்: கோஹ்லி - டிவில்லியர்ஸ் இடையே கடும் போட்டி!!

மும்பை: ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடிப்பதில் இந்தியாவின் விராட் கோஹ்லி மற்றும் தென்னாப்பிரிக்கா கேப்டன் டிவில்லியர்ஸ் இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து போட்டிகளுக்கான தரவரிசைப்பட்டியலை ஒவ்வொரு தொடரின் போதும் வெளியிடுவது வழக்கம்.

இதில் ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் கோஹ்லியும் தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸும் முதல் மற்றும் 2-ம் இடங்களில் உள்ளனர்.

முதலிடத்தில் கோஹ்லி

முதலிடத்தில் கோஹ்லி

கோஹ்லி 857 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

2வது இடத்தில் டிவில்லியர்ஸ்

2வது இடத்தில் டிவில்லியர்ஸ்

டிவில்லியர்ஸ் 849 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

8 புள்ளிகள்தான் வித்தியாசம்

8 புள்ளிகள்தான் வித்தியாசம்

இருவருக்கும் இடையே 8 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது.

இந்தியா- மே.தீவுகள் போட்டிகள்

இந்தியா- மே.தீவுகள் போட்டிகள்

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 21-ம் தேதி கொச்சியில் தொடங்குகிறது.

பாக்.- தென்.ஆப்பிரிக்கா மோதல்

பாக்.- தென்.ஆப்பிரிக்கா மோதல்

அதேசமயம், பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் ஒருநாள் தொடர் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது.

கோஹ்லி- டிவில்லியர்ஸ் இடையே போட்டி

கோஹ்லி- டிவில்லியர்ஸ் இடையே போட்டி

இத்தொடர்கள் முடியும்போது வெளியிடப்படும் பட்டியலில் யார் முதலிடம் என்பதில் கோஹ்லிக்கும் டிவில்லியர்ஸுக்கும் போட்டி ஏற்படலாம். இருவரது செயல்பாடும் சமீபகாலமாக திருப்தி அளிப்பதே அதற்குக் காரணம்.

அசத்திய கோஹ்லி, டிவில்லியர்ஸ்

அசத்திய கோஹ்லி, டிவில்லியர்ஸ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோஹ்லி அசத்தினார் என்றால், பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் டி வில்லியர்ஸ் வெளுத்து வாங்கினார். இதனால் தரவரிசைப் பட்டியலில் யார் முதலிடம் என்பது கணிக்க முடியாமல் இருக்கிறது. தொடர்கள் முடியும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.

மற்ற வீரர்கள்

மற்ற வீரர்கள்

இந்திய அணியின் கேப்டன் டோணி தொடர்ந்து 6-வது இடத்தில் நீடிக்கிறார். ஷிகர் தவன் 11-வது இடத்திலும் ரோஹித் சர்மா 15-வது இடத்திலும் சுரேஷ் ரெய்னா 17-வது இடத்திலும் என டாப் -20 க்குள் இடம் பிடித்துள்ளனர்.

டாப் 10-க்குள் வாய்ப்பு

டாப் 10-க்குள் வாய்ப்பு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இவர்கள் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினால் டாப்-10 க்குள் இடம் பெற வாய்ப்பிருக்கிறது.

Story first published: Tuesday, November 19, 2013, 17:34 [IST]
Other articles published on Nov 19, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+