Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பல வீரர்களுக்கு அச்சுறுத்தல்.. டிராவிட் - தேத்தன் சிக்கினர்.. ஸ்கெட்ச் போட்ட சாஹா.. பிசிசிஐ விசாரணை

மும்பை: சாஹாவை போன்றே வேறு கிரிக்கெட் வீரர்களுக்கும் கொடுமைகள் நடந்திருக்கலாம் என பிசிசிஐ தீவிர விசாரணையை முடுக்கியுள்ளது.

Recommended Video

Wriddhiman Sahaவை மிரட்டிய Journalist! Dravid, Ganguly சொன்னது என்ன | OneIndia Tamil

இந்திய கிரிக்கெட்டில் கடந்த 3 மாதங்களாக மிகவும் மோசமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறது எனக் கூறலாம்.

விராட் கோலியை பதவியில் இருந்து நீக்கியது, வெளிப்படை தன்மையின்மை என பல புகார்களுக்கு இன்னும் விடை கிடைக்காமல் உள்ளது.

சாஹா கிளப்பிய சர்ச்சை

சாஹா கிளப்பிய சர்ச்சை

இந்த வரிசையில் மூத்த வீரர் விருதிமான் சாஹா அடுத்ததாக சிக்கியுள்ளார். இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் விருதிமான் சாஹாவின் பெயர் இடம் பெறவில்லை. இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களில் ஒரு ஸ்கிரீன் ஷாட்டை சாஹா வெளியிட்டார். அதில் வாட்ஸ்-அப் மூலம் பத்திரிகையாளர் ஒருவர் சாஹாவுக்கு மிரட்டல் விடுத்த மெசேஜ்கள் அடங்கியிருந்தன.

என்ன மெசேஜ்

என்ன மெசேஜ்

அதாவது, "இனி நீ விக்கெட் கீப்பர் கிடையாது; எனது அழைப்பை ஏற்கவில்லை என்றால் இனி உன்னை எப்போதுமே நேர்க்காணல் செய்ய மாட்டேன்; இந்த அவமானத்தை மறக்கவே மாட்டேன்; பார்த்துக் கொள்கிறேன் என மிரட்டியுள்ளார். இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் டிராவிட், கங்குலி, சேத்தன் சர்மா ஆகியோர் குறித்தும் சாஹா குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார்.

சிக்கிய ராகுல் டிராவிட்

சிக்கிய ராகுல் டிராவிட்

தென்னாப்பிரிக்க தொடரை முடித்துவிட்டு தாயகம் திரும்பியபோது ராகுல் டிராவிட் என்னிடம், இனி உங்களை அணியில் எடுக்க மாட்டார்கள், ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது எனக்கூறினார். இதே போல தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மாவும்,இனி எனக்கு வாய்ப்பு கொடுக்கமாட்டோம் எனத்தெரிவித்ததாக கூறியதாக பரபரப்பை கிளப்பியுள்ளார்.

பிசிசிஐ உடனடி நடவடிக்கை

பிசிசிஐ உடனடி நடவடிக்கை

இந்நிலையில் இந்த விவகாரத்தில் பிசிசிஐ தலையிட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள மூத்த அதிகாரி ஒருவர், பிசிசிஐ உடன் ஒப்பந்தம் போடப்பட்ட வீரர் சாஹா. அந்தவகையில் பிசிசிஐ எந்தவொரு வீரரையும் கைவிடாது. ஆனால் வீரர்களுக்கு இதுபோன்ற அச்சுறுத்தல்கள் நடைபெறுவது அதிர்ச்சியாக இருக்கிறது. உடனடியாக இந்த விஷயத்தில் பிசிசிஐ தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்கும். இதற்காக அதிகாரிகள் விசாரனையை தொடங்குவார்கள்.

யார் அந்த நபர்

யார் அந்த நபர்

சாஹாவை போன்றே பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் இதுபோன்ற மன உளைச்சல்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம். அந்த பத்திரிகையாளர் யார் என்பதை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து கசிந்துள்ள தகவலின் படி போரியா தான் அந்த பத்திரிகையாளர் எனக் கூறப்படுகிறது.

Story first published: Monday, February 21, 2022, 15:20 [IST]
Other articles published on Feb 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+