Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

BCCI தலையில் எல்லாத்தையும் தூக்கி வைக்காதீங்க! வீரர்களுக்கு பொறுப்பு வேண்டும்! EX நிர்வாகி கருத்து

மும்பை : இந்திய அணி தோல்வியை தழுவினால், அதற்கு பிசிசிஐ மற்றும் தேர்வு குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்க முடியாது என்றும் வீரர்கள் தான் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று முன்னாள் தேர்வுக்குழு தலைவரும் கிரிக்கெட் வீரருமான சுனில் ஜோசி தெரிவித்துள்ளார்.

இந்திய அணி 2020-21 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் தொடரை வென்ற போது சுனில் ஜோசி தான் தேர்வு குழு தலைவராக இருந்தார். இந்த நிலையில் இந்திய அணி தற்போது தோல்வியை தழுவிய குறித்து அவர் அளித்துள்ள கருத்தை தற்போது பார்க்கலாம்.

ind vs aus virat kohli rohit sharma

இந்திய அணி தோல்வியை தழுவினால் அனைத்தையும் பிசிசிஐ தலையில் போடுவதை நிறுத்துங்கள். இது தனிப்பட்ட கிரிக்கெட் வீரர்களின் பொறுப்பாகும். அதை தான் நான் இங்கு அழுத்தமாக சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட போகிறீர்கள்.

அங்கு ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கப் போகிறது என நீங்கள் உணர்ந்தீர்கள் என்றால் ரஞ்சி கிரிக்கெட்டுக்கு சென்று உங்கள் அணிக்காக விளையாடுங்கள். அங்கு பெரிய தொடருக்காக உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் தற்போது அனைத்து பழியும் பிசிசிஐ மீது போடப்படுகிறது.

வீரர்கள்தான் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும். வீரர்களே அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். பாஸ்! நான் ரஞ்சி கிரிக்கெட் அல்லது துலீப் கோப்பைக்கு சென்று விளையாடுகிறேன் என்று கூற வேண்டும். சொந்த மண்ணில் தொடரை இழப்பது என்பது எப்போதுமே ஈஸியான காரியம் கிடையாது.

இந்திய அணி நிர்வாகமும் அப்படித்தான் யோசிக்கும். நீங்கள் நம்பர் ஒன் அணியாக இருக்க வேண்டுமென்றால், சொந்த மண்ணில் சிறப்பாக விளையாட வேண்டும். அதற்கு ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடி உங்களை தயார்படுத்திக் கொள்வது தான் ஒரே வழி. முன்பெல்லாம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் ரஞ்சிப் போட்டியில் கண்டிப்பாக இடம் பெறுவார்கள். ஆனால் தற்போது நிலைமை அப்படி இல்லை.

சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நமது அணியின் சிறந்த வீரர்கள் ரன் சேர்ப்பதில்லை. இதிலிருந்து தங்களை முன்னேற்றிக் கொள்ள வேண்டுமென்றால்,ரஞ்சிப் போட்டிக்கு சென்று சுழற் பந்துவீச்சாளர்களை அதிகளவு எதிர்கொள்ளுங்கள். ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடுகிற பிறகு தானே நீங்கள் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கின்றது.

அப்படி இருக்கும்போது இப்போது ஏன் நீங்கள் மீண்டும் ரஞ்சி விளையாட செல்ல மாட்டேன் என்கிறீர்கள். ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கு முன்பு குறைந்தபட்சம் இரண்டு ரஞ்சி கிரிக்கெட் போட்டிகள் ஆவது சீனியரு வீரர்கள் விளையாட வேண்டும். எந்த ஒரு வீரரும் கிரிக்கெட்டை விட மிகப் பெரியவர் கிடையாது. அனைவருக்கும் ஏற்றம் இறக்கம் என்று இருக்கும் என்று சுனில் ஜோசி தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, November 5, 2024, 17:59 [IST]
Other articles published on Nov 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+