Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யார் இந்த குட்டி கோலி..?? இனி இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் இவர் தான்.. !!

பெங்களூரு: சினிமா டைலக் தான், கொஞ்சம் பொறுத்துக்குங்க..மாற்றம் ஒன்றே மாறாதது என்பது தான் உலக நீதி. இங்கு எதும் நிரந்தரமும் அல்ல..

ஒரு சிறிய விதைக்குள் தான் அவ்வளவு பெரிய ஆலமரம் இருக்கிறது..அப்படி தான் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கான விதை இன்று தூவப்பட்டுள்ளது

அது நாளை ஆலமரம் ஆகுமா இல்லை புஸ்வானமாக மாறுமா என்பதை காலம் தான் கணிக்கும்.

ஆஸ்திரேலியா வழி

ஆஸ்திரேலியா வழி

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை பொறுத்தவரை, ஒரு கேப்டன் இருக்கும் போதே அடுத்த கேப்டனை தயார் செய்வார்கள். இவர் தான் அடுத்த ஸ்டார் என்று அடையாளப்படுத்தி துணை கேப்டன் பொறுப்பு கொடுத்து, கேப்டனிடமிருந்த கற்று கொள்ள வைப்பார்கள். பாண்டிங் இருக்கும் போது மைக்கில் கிளார்க்கும், மைககில் கிளார்க் இருக்கும் போது ஸ்மித் என்று எதிர்கால கேப்டனை இப்படி தான் வளர்ப்பார்கள்.

இந்தியாவின் எதிர்காலம்

இந்தியாவின் எதிர்காலம்

இதே பாணியை தான், இந்தியாவும் பின்பற்றியது. தோனி கேப்டனாக இருக்கும் போதே விராட் கோலியை துணை கேப்டனாக பதவி கொடுத்து கற்று கொள்ள வாய்ப்பு வழங்கியது. அப்படி தான், இன்று ரோகித் சர்மா, விராட் கோலி கேப்டன்களாக இருக்கும் போது துணை கேப்டன் பதவி கே.எல்.ராகுலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கலக்கிய கே.எல்.ராகுல்

கலக்கிய கே.எல்.ராகுல்

பெங்களூருவை சேர்ந்த ராகுல், ஐ.பி.எல். தொடரில் ஆர்.சி.பி அணியில் கோலியின் நிழலாக இருந்தார். பின்னர் தனது திறமையை நிரூபித்து அதிரடி பேட்ஸ்மேனாக விளங்கி பஞ்சாப் அணியை வழிநடத்தினார். கேப்டனாக தனி ஆளாக நின்ற பஞ்சாப் அணிக்காக ராகுல் பல போட்டிகளில் போராடியுள்ளார். இதனால் கே.எல்.ராகுல் தான் இந்தியாவின் எதிர்காலமாக பார்க்கப்படுகிறார்.

வாய்ப்பு

வாய்ப்பு

விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணியை வழிநடத்தபோவது இவர் தான் என்று சொல்லாமல் சொல்லிவிட்டது பி.சி.சி.ஐ. டெஸ்ட் போட்டிகளில் கோலியிடமிருந்தும், ஒருநாள், டி20 போட்டிகளில் ரோகித்திடமிருந்தும் பாடங்களை கற்று கொள்ள சிறந்த வாய்ப்பு இனி ராகுலுக்கு கிடைத்துள்ளது.ராகுல் ஜாம்பவான்கள் வரிசையில் இடம்பெறுவாரா என்பதை காலம் தான் பதில் சொல்லும்.

Story first published: Saturday, December 18, 2021, 20:18 [IST]
Other articles published on Dec 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+