Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“கேப்டன் ஆனார் கே.எல்.ராகுல்” ஒருநாள் தொடருக்கான இந்திய அணி வெளியானது.. முக்கிய வீரர்கள் கம்பேக்!

மும்பை: தென்னாப்பிரிக்கா உடனான ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனை தொடர்ந்து வரும் ஜனவரி 19ம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் நடைபெறவுள்ளது.

இதற்கான இந்திய அணியை அறிவிப்பதில் பிசிசிஐ குழப்பத்தில் இருந்து வந்த சூழலில் ஒருவழியாக தற்போது வெளியிட்டுள்ளது.

கேப்டன்சி மாற்றம்

கேப்டன்சி மாற்றம்

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா காயத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்றாக கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணைக்கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஓப்பனிங் குழப்பம்

ஓப்பனிங் குழப்பம்

ஓப்பனிங்கில் கே.எல்.ராகுலுடன் சேர்த்து இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் சீனியர் வீரர் ஷிகர் தவானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ருதுராஜ் சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் தொடர்ச்சியாக 4 சதங்களை விளாசி அசத்தியிருந்தார். மற்றொரு புறம் ஷிகர் தவான் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி இருந்தார். இதனால் இவர்கள் இருவரில் யார் ஓப்பனிங் இறங்குவது என்ற குழப்பம் ஏற்படலாம்.

மிடில் ஆர்டர் வீரர்கள்

மிடில் ஆர்டர் வீரர்கள்

மிடில் ஆர்டரில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மற்றொரு சர்ஃபரைஸ் விஷயம் என்னவென்றால் ஐபிஎல் தொடரில் அதிரடி காட்டிய வெங்கடேஷ் ஐயருக்கும் பிசிசிஐ வாய்ப்பு வழங்கியுள்ளது. ஹர்திக்கின் இடத்தை அவர் நிரப்புவார் எனத்தெரிகிறது.

அவரை தொடர்ந்து ரிஷப் பண்ட், இஷான் கிஷான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சுழற்பந்துவீச்சு படை

சுழற்பந்துவீச்சு படை

அக்‌ஷர் பட்டேல் மற்றும் ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் சுழற்பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் யுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் கம்பேக் கொடுத்துள்ளனர். இதில் அஸ்வின் 4 ஆண்டுகளுக்கு பின்னர் ஒருநாள் போட்டிகளில் கம்பேக் கொடுக்கவுள்ளார்.

பவுலிங் படை

பவுலிங் படை

வேகப்பந்துவீச்சை பொறுத்தவரையில் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ் என பெரும்படை இடம்பெற்றுள்ளது. இவர்களுடன் சேர்ந்து பிரஷித் கிருஷ்ணாவுக்கும் பிசிசிஐ வாய்ப்பு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி பட்டியல்

இந்திய அணி பட்டியல்

கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ருதுராஜ் கெயிக்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பண்ட், இஷான் கிஷான், யுவேந்திர சாஹல், அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், பிரஷித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ்

Story first published: Friday, December 31, 2021, 21:33 [IST]
Other articles published on Dec 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+