Ipl 2019:ரசிகர்களே.. கேட்ச் பிடித்தால் ரூ.1லட்சம்.. காசு.. பணம்.. துட்டு.. மணி.. மணி
Recommended Video

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில், மைதானத்தில் அமர்ந்திருக்கும் ரசிகர்கள், வீரர்கள் அடிக்கும் பந்தை ஒரு கையில் கேட்சாக பிடித்தால் அவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று பிசிசிஐ தற்காலிக செயலாளர் அமிதாப் செளத்ரி தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 23ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. அந்த தொடரை ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் வகையில் பிசிசிஐ பல புதிய முயற்சிகளை கையாண்டு வருகிறது.
அதன் ஒரு முயற்சி தான் பேட்ஸ்மேன் அடிக்கும் பந்தை மைதானத்தில் அமர்ந்திருக்கும் ரசிகர்கள் கேட்ச் பிடித்தால் பரிசு என்னும் அறிவிப்பு. அதுவும் போட்டியை நேரில் காண வரும் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் அடிக்கும் சிக்சர் பந்துகளை ஒரு கையில் பிடித்தால், ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

கைகோர்ப்பதில் சந்தோஷம்
இதுகுறித்து பிசிசிஐயின் தற்காலிக செயல் அதிகாரி அமிதாப் சௌத்ரி கூறியதாவது: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்து செயல்படுவதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.

கார் பிரபலம்
இந்த முறை அந்த நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்திய எஸ்யூவி கார் ஐபிஎல் தொடரின் அதிகாரப்பூர்வமான பார்ட்னராக இணைந்துள்ளது. அதனால், அந்த காரை பிரபலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிக்சர்களுக்கு 1 லட்சம்
அதற்காக வீரர்கள் அடிக்கும் சிக்சர்களை ஒருகையில் பிடிக்கும் ரசிகர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். காண்போரை ரசிக்க வைக்கும் வகையில் பந்தை பிடிக்கும் அதிர்ஷ்டசாலி நபர் ஒருவருக்கு இந்த கார் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

டி 20 தொடரில் அறிமுகம்
ரசிகர்கள் ஒருகையில் பந்தை பிடித்தால் அவர்களுக்கு பணம் வழங்குவது புதியது அல்ல. ஆனால்... அந்த திட்டத்தை முதலில் டிரெண்டாக்கியது நியூசிலாந்து டி20 தொடர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications