Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்- ல் 3 புதிய விதிமுறைகள்.. இனி ப்ளேயிங் 11ல் இருந்தே ரசிகர்களுக்கு ட்விஸ்ட் இருக்கும்.. விவரம்

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரசிகர்கள் ஆச்சரியப்படும் வகையில் மேலும் சில விதிமுறைகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது பிசிசிஐ. இதன் மூலம் ஒவ்வொரு அணிக்கும் பல்வேறு சலுகைகள் கிடைக்கலாம்.

2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்தாண்டு கொரோனா பிரச்சினைகள் எதுவும் இல்லாததால் அனைத்து அணிகளும் தங்களது ஹோம் மைதானங்களில் விளையாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் புதிதாக கொண்டு வந்துள்ள விதிமுறைகளும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

அதாவது ஐபிஎல் தொடரில் இந்த முறை இம்பேக்ட் ப்ளேயர் என்ற விதிமுறையை கொண்டு வந்தனர். இதன் மூலம் இனி ஒவ்வொரு அணியும் 11 வீரர்கள் மட்டுமல்லாது கூடுதலாக ஒரு வீரரை ஆட்டத்தின் நடுவே சேர்த்துக்கொள்ள முடியும். அவரும் சக வீரர்களை போலவே பேட்டிங், கீப்பிங், ஃபீல்டிங் என எது வேண்டுமானாலும் செய்ய முடியும். இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத மேலும் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகள்

புதிய விதிமுறைகள்

வழக்கமாக ஒவ்வொரு போட்டியின் போதும் டாஸ் போடுவதற்கு முன்பாக கேப்டன்கள் தங்களது அணியின் ப்ளேயிங் 11 ஷீட்டை எதிரணி கேப்டனிடம் கொடுக்க வேண்டும். ஆனால் இனி டாஸ் போடப்பட்ட பிறகு ப்ளேயிங் 11-ஐ அறிவித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ் போட்டு, முடிவெடுத்துவிட்ட பிறகு அணியில் விளையாடப்போகும் வீரர்களை அறிவிக்கலாம். அணிகள் எப்படியும் பேட்டிங் கிடைத்துவிடும் என நினைத்து வந்து, பின்னர் டாஸில் ஏமாந்துவிடுகின்றனர். இதனால் வேறு வழியின்றி அதே ப்ளேயிங் 11 உடன் ஆட வேண்டும். எனவே இந்த விதிமுறை மூலம் அவற்றினை தவிர்க்கலாம்.

மேலும் 2 விதிகள்

மேலும் 2 விதிகள்

போட்டிகளின் போது ஒரு பேட்ஸ்மேனை வேண்டுமென்றே எதிரணி விக்கெட் கீப்பர்கள் அல்லது ஃபீல்டர்கள் வம்பிற்கு இழுப்பார்கள். இது சகஜமானது தான் எனக்கூறினாலும், சில சமயங்களில் நியாயமே இல்லாமல் நடந்துக்கொள்வார்கள். எனவே இனி அப்படி நடந்தால் அந்த பந்தினை டெட் பால் எனக்கூறி 5 ரன்களை பேட்டிங் அணிக்கு கொடுத்து விடுவார்கள். இதே போல குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை முடிக்கவில்லை என்றால், நேரம் முடிந்த பிறகு வீசும் ஓவர்களின் போது வட்டத்திற்கு வெளியே 4 ஃபீல்டர்கள் தான் இருக்க முடியும்.

கூடுதல் சுவாரஸ்யம்

கூடுதல் சுவாரஸ்யம்

இந்த விதிமுறைகளை ஏற்கனவே தென்னாப்பிரிக்க லீக் தொடரில் கொண்டு வந்தனர். அதில் நல்ல பலன் கிடைத்துள்ளதால் ஐபிஎல் தொடரிலும் கொண்டு வருகின்றனர். இம்பேக்ட் ப்ளேயர், டாஸிற்கு பின் ப்ளேயிங் 11 அறிவிப்பு, ஓவரை முடிக்க காலக்கெடு, டெட் பால் என பல விதிமுறைகளுடன் இந்தமுறை ஐபிஎல் வருவதால் ரசிகர்களுக்கு கூடுதல் சுவாரஸ்யம் கிடைக்கும்.

Story first published: Wednesday, March 22, 2023, 18:03 [IST]
Other articles published on Mar 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+