Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதென்னா சிறைச்சாலையா?? .. ஐபிஎல் -காக பிசிசிஐ போட்ட முக்கிய கண்டிஷன்கள்.. கொந்தளித்த வீரர்கள்!

மும்பை: ஐபிஎல் தொடரில் கொரோனா விதிமுறைகளை மீறும் வீரர்கள், ஊழியர்களை கட்டுப்படுத்த மிக கடுமையான தண்டனைகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.

நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 26ம் தேதி முதல் மும்பை, புனே, அகமதாபாத் நகரங்களில் மட்டும் நடைபெறவுள்ளது.

விமான பயணங்கள் இருந்தால் கொரோனா பரவிவிடும் என்பதால் மிகக்குறைந்த தூரத்தில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகிறது.

கொரோனா அச்சுறுத்தல்

கொரோனா அச்சுறுத்தல்

கடந்தாண்டு இந்தியாவில் நடந்த ஐபிஎல் தொடரில் வருண் சக்கரவர்த்தி உள்ளிட்ட சில வீரர்கள் விதிமுறைகளை மீறி பயோ பபுளை விட்டு வெளியே சென்றதால், பாதிப்புகள் அதிகரித்தன. மேலும் ஐபிஎல் போட்டிகளை நிறுத்தி வைத்து அமீரகத்தில் நடந்து முடிந்தது. இதனால் இந்தாண்டு அது போன்ற எந்த தவறும் நடந்துவிடக்கூடாது என்பதில் பிசிசிஐ உறுதியாகவுள்ளது.

பிசிசிஐ -ன் அறிவிப்பு

பிசிசிஐ -ன் அறிவிப்பு

அதற்காக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒரு வீரர் கொரோனா விதிமுறையை மீறினால், அவர் 7 அல்லது அதற்கும் மேற்பட்ட நாட்கள் குவாரண்டைன் அனுப்பப்படுவார். ஆனால் அந்த நாட்களுக்கு ஊதியம் தரக்கூடாது. 2வது முறையாக அதே தவறு செய்தால், 7 நாள் குவாரண்டைன் இல்லாது, ஒரு போட்டியில் இருந்து சஸ்பண்ட் செய்யப்படுவார். 3 முறை குற்றச்சாட்டு எழுந்தால், தொடரில் இருந்தே வெளியேற்றப்படுவார்.

அணிகளுக்கு அபராதம்

அணிகளுக்கு அபராதம்

வெளியில் இருந்து யாரேனும் ஒருவரை அணியின் பபுளுக்குள் அனுமதித்தது தெரிந்தால், சம்மந்தப்பட்ட அணிக்கு ரூ. 1 கோடி அபராதம் விதிக்கப்படும். 2 முறை இதே குற்றச்சாட்டில் சிக்கினால் அந்த அணிக்கு தொடரில் இருந்து ஒரு புள்ளி குறைக்கப்படும். 3 முறை குற்றம்சாட்டப்பட்டால் 2 புள்ளிகள் குறைக்கப்படும்.

குடும்பத்தினருக்கும் தண்டனை

குடும்பத்தினருக்கும் தண்டனை

வீரர்களின் குடும்பத்தினருக்கும் தண்டனைகள் உண்டு. குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் விதிமுறையை மீறினால், அவர்களும், அந்த சம்மந்தப்பட்ட வீரரும் 7 நாட்கள் குவாரண்டைன் அனுப்பப்படுவார்கள். 2வது முறையென்றால், குடும்பத்தினர் பபுளை விட்டு வெளியேற்றப்படுவார்கள். அந்த வீரர் குவாரண்டைன் அனுப்பப்படுவார். தவறவிடும் போட்டிகளுக்கு ஊதியம் கிடையாது.

போட்டி விதிமுறைகள்

போட்டி விதிமுறைகள்

ஒருவேளை ஏதேனும் ஒரு அணியில் அதிக கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் கூட, 12 வீரர்கள் இருந்தால் போதும், ( 7 இந்தியர்கள், ஒரு சப்ஸ்டிட்யூட்) போட்டியை பிசிசிஐ நடத்தும். ஒருவேளை 12 வீரர்கள் கூட பங்கேற்க முடியவில்லை என்றால் போட்டியை ஒத்திவைக்க காலம் இருக்குமா என்று பார்ப்பார்கள், இல்லையென்றால்

ஐபிஎல் நிர்வாகம் கூறுவதே இறுதி முடிவாக இருக்கும்.

கொதித்த வீரர்கள்

கொதித்த வீரர்கள்

இதனை கேட்ட அணி நிர்வாகம் மற்றும் வீரர்களும் அதிருப்தியில் உள்ளனர். இது என்ன ஐபிஎல் பயோ பபுளா அல்லது சிறைச்சாலையா, இந்த அளவிற்கு கடுமையான விதிமுறைகளை போடுகிறீர்கள் என சில நிர்வாகங்கள் பிசிசிஐயிடம் நேரடியாக கேட்டுவிட்டன எனத் தெரிகிறது.

Story first published: Tuesday, March 15, 2022, 18:43 [IST]
Other articles published on Mar 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+