For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனி இந்திய அணியை தேர்வு செய்யப் போவது இவர் தான்.. பிசிசிஐ பரபர அறிவிப்பு.. யார் இந்த சுனில் ஜோஷி?

மும்பை : இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வுக் குழு தலைவராக சுனில் ஜோஷியை நியமித்துள்ளது பிசிசிஐ.

Recommended Video

BCCI appoints Sunil Joshi as Chief selector

கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் நேர்காணலில் தேர்வு செய்யப்பட்ட சுனில் ஜோஷியை, அந்த குழுவின் பரிந்துரை அடிப்படையில் தேர்வுக் குழு தலைவராகவும் நியமித்துள்ளது பிசிசிஐ.

இனி இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களை தேர்வு செய்யும் அதிகாரம் இவருக்கே உள்ளது.

விமர்சனம்

விமர்சனம்

இதற்கு முன் இருந்த தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் மீது கடும் விமர்சனம் இருந்த நிலையில், சுனில் ஜோஷி என்ன செய்யப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எம்எஸ்கே பிரசாத் கேப்டன் கோலியின் சொல்படி நடந்து கொள்வதாகவும் கூட கூறப்பட்டது.

பிசிசிஐ மாற்றம்

பிசிசிஐ மாற்றம்

பிசிசிஐ அமைப்பு கடந்த சில ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கங்குலி பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றார். அப்போது தற்போது இருந்த தேர்வுக் குழுவை மாற்றி அமைக்க வேண்டும் என கூறப்பட்டது.

கங்குலி எடுத்த முடிவு

கங்குலி எடுத்த முடிவு

இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் மற்றும் உறுப்பினர் ககன் கோடா ஆகிய இருவரின் பதவிக் காலம் முடிவடைந்தது. அவர்களுக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப் போவதில்லை என முடிவு எடுத்தார் கங்குலி.

கிரிக்கெட் ஆலோசனைக் குழு

கிரிக்கெட் ஆலோசனைக் குழு

பின் தேர்வுக் குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய விதிப்படி கிரிக்கெட் ஆலோசனைக் குழு கடந்த சில வாரங்கள் முன்பு அறிவிக்கப்பட்டது. அதில் மதன் லால், ஆர்பி சிங் மற்றும் சுலக்ஷ்னா நாயக் ஆகியோர் இடம் பெற்றனர்.

லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் பெயர்

லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் பெயர்

தேர்வுக் குழு உறுப்பினர் மற்றும் தலைவர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் முன்னாள் வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் பெயர் முன்னிலையில் இருந்தது. அவரது விண்ணப்பம் பெறப்படவில்லை என ஒரு சர்ச்சை எழுந்து பின் ஓய்ந்தது.

மற்ற இருவர்

மற்ற இருவர்

அவருக்கு அடுத்து முன்னாள் இந்திய அணி வீரர்கள் அஜித் அகர்கர் மற்றும் வெங்கடேஷ் பிரசாத் ஆகியோர் தேர்வுக் குழு தலைவர் பதவியில் அமரலாம் என்றும் ஒரு தகவல் கூறப்பட்டது. ஆனால், இவர்களை தாண்டி வேறு இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் யாருமே இல்லை

இவர்கள் யாருமே இல்லை

தலைவர் பதவிக்கான போட்டியில் இருப்பதாக கூறப்பட்ட மூவரை தாண்டி, சுனில் ஜோஷி தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். உறுப்பினர் பதவியில் ஹர்விந்தர் சிங் என்ற முன்னாள் வீரர் நியமனம் செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் ஏற்கனவே, பதவியில் இருக்கும் மூன்று உறுப்பினர்களான தேவாங் காந்தி, சரண்தீப் சிங் மற்றும் ஜாட்டின் பரஞ்சாபே ஆகியோருடன் இணைந்து பணி ஆற்றுவார்கள்.

யார் இந்த சுனில் ஜோஷி?

யார் இந்த சுனில் ஜோஷி?

இந்திய அணிக்காக 1996 முதல் 2001 வரை சுழற் பந்துவீச்சாளராக ஆடியவர் தான் சுனில் ஜோஷி. இந்திய அணிக்காக 15 டெஸ்ட் போட்டிகள், 69 ஒருநாள் போட்டிகளில் ஆடி உள்ளார். 2008 முதல் 2010 வரை ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிக அனுபவம்

அதிக அனுபவம்

பயிற்சியாளராகவும் அதிக அனுபவம் கொண்டுள்ளார் சுனில் ஜோஷி. ஹைதராபாத் மாநில கிரிக்கெட் அணி, ஜம்மு காஷ்மீர் அணி, சுழற் பந்துவீச்சு பயிற்சியாளராக ஓமன் அணி, வங்கதேச அணி மற்றும் அம அமெரிக்க அணியிலும் பணி ஆற்றி உள்ளார்.

ஹர்விந்தர் சிங் அனுபவம் குறைவு

ஹர்விந்தர் சிங் அனுபவம் குறைவு

உறுப்பினர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ள ஹர்விந்தர் சிங் 3 டெஸ்ட் போட்டிகள், 16 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ளார். தேர்வுக் குழு உறுப்பினர்களின் சர்வதேச அனுபவம் குறித்த சர்ச்சை ஏற்கனவே உள்ள நிலையில், மீண்டும் அனுபவம் குறைந்த நபரை தேர்வுக் குழு உறுப்பினர் பதவியில் அமர்த்தி உள்ளது பிசிசிஐ.

Story first published: Wednesday, March 4, 2020, 18:30 [IST]
Other articles published on Mar 4, 2020
English summary
BCCI appoints Sunil Joshi as Chief selector for Indian senior team. Harvinder Singh picked as member.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+