For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நீங்க ரஞ்சி தொடர்ல ஆடினது போதும்.. அஸ்வின், இஷாந்தை தடுத்த பிசிசிஐ.. ஏன்? என்னாச்சு?

மும்பை : இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி பந்துவீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, அஸ்வின் இருவரும் ரஞ்சி ட்ராபி தொடரில் ஆட வேண்டாம் என பிசிசிஐ வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி ட்ராபியில் அஸ்வின் மற்றும் இஷாந்த் சர்மா பங்கேற்று ஆடி வருகின்றனர்.

அதே சமயம் டி20யில் ஆடும் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. அடுத்து, டெஸ்ட் தொடருக்கு முன் நவம்பர் 28இல் பயிற்சிப் போட்டி நடைபெற உள்ளது.

ரஞ்சி ஆட்டம் போதும்

ரஞ்சி ஆட்டம் போதும்

அஸ்வின், இஷாந்த் சர்மா இருவரும் டெஸ்ட் அணியில் மட்டுமே இடம் பிடித்துள்ளனர். இவர்கள் நவம்பர் 24 அன்று ஆஸ்திரேலியா புறப்பட்டுச் செல்ல உள்ளனர். இவர்கள் இருவரும் அடுத்த ரஞ்சி போட்டியில் பங்கேற்றால் அது முடிய நவம்பர் 23 ஆகும். இது மட்டுமல்லாமல், இவர்கள் இருவரும் டெஸ்ட் அணியில் முக்கிய வீரர்கள் ஆவர். அதையும் கருத்தில் கொண்டே பிசிசிஐ இவர்கள் ரஞ்சி தொடரில் ஆடியது போதும் என கூறியுள்ளது.

பயிற்சிப் போட்டியில் இஷாந்த், அஸ்வின்

பயிற்சிப் போட்டியில் இஷாந்த், அஸ்வின்

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடருக்கு முன் ஒரே ஒரு நான்கு நாள் முதல் தர டெஸ்ட் போட்டியில் இந்தியா ஆடவுள்ளது. டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் நடைபெற உள்ள இந்த போட்டியில் இஷாந்த் மற்றும் அஸ்வின் பங்கேற்பார்கள் என தெரிகிறது. இந்த போட்டி நவம்பர் 28 துவங்க உள்ளது.

இஷாந்த் சர்மா காயம்

இஷாந்த் சர்மா காயம்

இஷாந்த் சர்மா கடைசியாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்றார். அந்த தொடரின் முடிவில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதில் இருந்து மீள நீண்ட ஓய்வு எடுத்துக் கொண்டார். அதற்காக, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இஷாந்த் ஆடவில்லை. அஸ்வின், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பந்து வீசினார். அடுத்து தியோதர் தொடர் மற்றும் ரஞ்சி தொடரில் தொடர்ந்து ஓய்வின்றி ஆடி வருகிறார்.

ஷமிக்கும் கட்டுப்பாடு

ஷமிக்கும் கட்டுப்பாடு

இவர்கள் இருவரும் தவிர டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள முகமது ஷமியையும் ரஞ்சி போட்டி விஷயத்தில் பிசிசிஐ கட்டுப்படுத்தியுள்ளது. ஷமி நிச்சயம் ரஞ்சி தொடரில் ஆட விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே, அவருக்கு ஒரு இன்னிங்க்ஸுக்கு 15 ஓவர்கள் மட்டுமே வீச வேண்டும் என்ற கட்டுப்பாடுடன் விளையாட அனுமதி அளித்துள்ளது. அதைப் பற்றிய முழுமையான தகவலை இங்கே படிக்கலாம்.

முகமது ஷமிக்கு ஓவரே கொடுக்காதீங்க.. பிசிசிஐ உத்தரவு.. ஒப்புக் கொண்ட கேப்டன்

Story first published: Monday, November 19, 2018, 14:56 [IST]
Other articles published on Nov 19, 2018
English summary
BCCI asked Ashwin and Ishant sharma to skip Ranji trophy matches
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+