Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரசிகையான க்யூட் லிட்டில் பிரின்சஸ்... டிவிட்டர் பக்கத்தில் பிசிசிஐ பாராட்டு!

சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 5ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.

கொரோனா தாக்கம் காரணமாக சென்னையில் ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது.

ஆயினும் இந்த போட்டியில் ரோகித் சர்மாவின் மனைவி மற்றும் மகள் சமைரா உள்ளிட்ட சிலரை பார்க்க முடிந்தது. சமைராவின் புகைப்படத்தை வெளியிட்ட பிசிசிஐ சிறிய க்யூட்டான ரசிகை என்று பாராட்டு தெரிவித்துள்ளது.

4 போட்டி டெஸ்ட் தொடர்

4 போட்டி டெஸ்ட் தொடர்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னையில் கடந்த 5ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 578 ரன்களை குவித்த நிலையில் தற்போது இந்திய அணி ஆடி வருகிறது.

ரசிகர்கள் இல்லாத போட்டி

ரசிகர்கள் இல்லாத போட்டி

கொரோனா தாக்கம் காரணமாக இந்த போட்டி ரசிகர்கள் அற்ற காலி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆயினும் ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா மற்றும் மகள் சமைரா உள்ளிட்ட சிலரை பார்வையாளர்கள் பகுதியில் காண முடிந்தது. இந்திய வீரர்களை அவர்கள் உற்சாகப்படுத்தியதையும் காண முடிந்தது.

புகைப்படம் வெளியிட்ட பிசிசிஐ

இந்நிலையில் இவர்கள் இருவரின் புகைப்படத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. மேலும் க்யூட் லிட்டில் சப்போர்ட்டருக்கு ஹலோ சொல்லுங்கள் என்றும் கேப்ஷன் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டுள்ளது.

சொதப்பிய ரோகித்

சொதப்பிய ரோகித்

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இன்றைய தினம் துவங்கிய நிலையில், ரோகித் சர்மா 6 ரன்களின் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கவனம் பெற்ற அவர் இந்த தொடரின் முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை தர தவறியுள்ளார்.

Story first published: Sunday, February 7, 2021, 13:49 [IST]
Other articles published on Feb 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+