Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிசிசிஐ தேர்வுக்குழு பதவியை மறுத்த 2 ஸ்டார் வீரர்கள்.. ஊதியத்தை உயர்த்தியும் வேண்டாம் என மறுப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் காலியாக உள்ள இடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில், தலா சுமார் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட இரண்டு முன்னாள் வீரர்கள் பிசிசிஐயின் தேர்வாளர் பதவியை நிராகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் அகர்கர் தனது பதவிக் காலத்தை நீட்டிக்க விரும்பாததைத் தொடர்ந்து, மேற்கு மண்டலத்தை சேர்ந்த காலியாக உள்ள இந்த இடத்திற்கு பொருத்தமான நபரை பிசிசிஐ தேடி வருகிறது.முக்கியப் பொறுப்புகளுக்குப் பிரபல முன்னாள் வீரர்களை நியமிக்க பிசிசிஐ விரும்புவதாகவும், இதற்காக தேர்வாளர்களுக்கான ஊதியத்தை கணிசமாக உயர்த்தத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

BCCI

இருப்பினும், பிசிசிஐ அணுகிய இரண்டு மூத்த முன்னாள் வீரர்களும் இந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டனர். தற்போது பிரக்யான் ஓஜா, ஆர்.பி. சிங், அஜய் ரத்ரா மற்றும் எஸ்.எஸ். தாஸ் ஆகியோர் ஆடவர் தேர்வுக்குழுவின் உறுப்பினர்களாகச் செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆர்.பி. சிங் மற்றும் ஓஜா தேர்வுக்குழுவில் இணைந்தபோது ஊதிய மறுபரிசீலனை செய்யப்பட்டது.

IND vs WI: ஸ்ரேயாஸ் கேப்டன்ஷி சரியில்லை.. வெஸ்ட் இண்டீஸை 247 ரன்கள் அடிக்கவிட்டுருக்க கூடாது..கையிப்

IND vs WI: ஸ்ரேயாஸ் கேப்டன்ஷி சரியில்லை.. வெஸ்ட் இண்டீஸை 247 ரன்கள் அடிக்கவிட்டுருக்க கூடாது..கையிப்

இதனால் பிசிசிஐயின் வருடாந்திர தேர்வுக்குழு பட்ஜெட் ரூ.3 கோடி அதிகரித்து, ரூ.17.45 கோடியாக உயர்ந்தது.தற்போது 2026-27 ஆம் ஆண்டிற்காக இந்த பட்ஜெட்டை மேலும் ரூ.2 கோடி வரை உயர்த்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தேர்வுக்குழுவிற்கான வருடாந்திர செலவு ரூ.19.35 கோடியாக அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

பிசிசிஐ அறிவித்துள்ள தகுதி வரம்புகளின்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 7 டெஸ்ட் போட்டிகள் அல்லது 30 முதல்தரப் போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும். அல்லது 10 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 முதல்தரப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பிப்பதற்கு குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன், பிசிசிஐ விதிமுறைகளின் கீழ் இயங்கும் எந்தவொரு கிரிக்கெட் குழுவிலும் ஏற்கனவே மொத்தம் ஐந்து ஆண்டுகள் பதவி வகித்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்குழு உறுப்பினரின் முக்கியப் பணிகளில் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளைக் நேரில் கண்டு வீரர்களின் திறமையைக் கணிப்பது, அணி தேர்வுக் கூட்டங்களில் பங்கேற்பது மற்றும் தேவைக்கேற்ப போட்டிகளைக் காணப் பயணம் செய்வது ஆகியவை அடங்கும்.

IND vs WI: உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா.. சூர்யகுமார் சிக்சர் ரெக்கார்ட் முறியடிப்பு

Also Read

IND vs WI: உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா.. சூர்யகுமார் சிக்சர் ரெக்கார்ட் முறியடிப்பு

மேலும், பிசிசிஐ உயர்நிலைக் குழுவிற்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வீரர்களின் செயல்திறன் குறித்து அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். அணித் தேர்வு குறித்து ஊடகங்களுக்கு விளக்கம் அளிப்பதும், அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் இந்திய அணியின் கேப்டனை நியமிப்பதும் தேர்வுக்குழுவின் முக்கியப் பொறுப்பாகும்.

Story first published: Thursday, October 15, 2026, 13:10 [IST]
Other articles published on Oct 15, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+