Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவங்க தான் இந்தியாவின் எதிர்கால கேப்டன்கள்.. உண்மைய உடைத்த தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா

மும்பை: இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி மூன்று டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்த தொடருக்கான ரோகித் சர்மா தலைமையில் 18 பேர் கொண்ட டி20 அணியையும், டெஸ்ட் அணியையும் தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா அறிவித்தார்.

அப்போது ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன்கள் யார் என்பது குறித்து பிசிசிஐ மனதில் இருக்கும் வீரர்கள் யார் என்பதை கூறினார்.

பும்ரா

பும்ரா

இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு கேப்டனாகும் தகுதியும், திறமையும் இருப்பதாக சேத்தன் சர்மா கூறி இருந்தார். தற்போது வேகப்பந்துவீச்சாளர்களை கேப்டனாக நியமிக்கும் கலாச்சாரம் தொடங்கியுள்ளது. தற்போது ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டனாக பாட் கம்மின்ஸ் என்ற வேகப்பந்துவீச்சாளர் தான் உள்ளார். ஆனால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படும் என்பதால், அவர்களால் அனைத்து டெஸ்ட் போட்டியிலும் விளையாட முடியாது.

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

இந்தியாவின் அனைத்து போட்டிகளுக்கும் எதிர்கால கேப்டனாக பிசிசிஐ ஆலோசனை நடத்தி வரும் நபர் ரிஷப் பண்ட். ஒரு விக்கெட் கீப்பர் தான் அணியின் அறிவிக்கப்படாத துணை கேப்டன் என்பது தோனியின் கூற்று. ஏனென்றால், அவரால் தான் 360 டிகிரியில் மைதானத்தில் என்ன நடக்கிறது, யார் எங்கே நிற்கிறார், பேட்ஸ்மேன் எப்படி விளையாடுகிறார் என்பது தெரியும். இதனால் தோனியை போலவே ரிஷப் பண்ட் சிறந்த கேப்டனாக இருப்பார் என்று சேத்தன் சர்மா நம்புகிறார்.

கே.எல். ராகுல்

கே.எல். ராகுல்

இந்திய அணியின் அடுத்த கேப்டன்களில் முதன்மையாக இருக்கும் நபர் கே.எல், ராகுல் தான் என்று தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார். ஆனால் ராகுல் தலைமையில் இந்திய அணி இதுவரை ஒரு போட்டியில் கூட வென்றது இல்லை. தற்போது ஐபிஎல் தொடரில் கம்பீரிடம் அவர் என்ன கற்கிறார் என்பதை பொருத்தே அவரது எதிர்காலம் அமையும்.

ரோகித் கீழ் பயிற்சி

ரோகித் கீழ் பயிற்சி

பும்ரா, ரிஷப் பண்ட் மற்றும் ராகுல் ஆகியோருக்கு தான் அடுத்த கேப்டன்கள் ஆக தகுதி இருப்பதாக கூறியுள்ள சேத்தன் சர்மா, இந்த மூன்று வீரர்களும் ரோகித் சர்மா கீழ் செயல்பட்டு, அவரிடம் கற்க வாய்ப்பு தந்து கொண்ட இருக்கிறோம் என்று சேத்தன் சர்மா கூறினார். இந்த மூன்று வீரர்களில் யாருக்கு அந்த பொறுப்பு கிடைக்கிறது என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Story first published: Saturday, February 19, 2022, 18:13 [IST]
Other articles published on Feb 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+