Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீதிபதி லோதா தீர்ப்பு.. ஆராய்ந்து அறிக்கை தர கங்குலி உள்ளிட்டோரை கொண்ட கமிட்டி அமைத்தது பிசிசிஐ

மும்பை: ஐபிஎல் அணிகள் மற்றும் நிர்வாகிகள் தொடர்பாக நீதிபதி ஆர்.எம். லோதா கமிட்டி பிறப்பித்துள்ள தீர்ப்பு குறித்து ஆராய்ந்து பரிந்துரை செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் கமிட்டியில் ராஜீவ் சுக்லா, அனுராத் தாகூர், சவுரவ் கங்குலி, அனிருத் சவுத்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மும்பையில் நேற்று ஐபிஎல் நிர்வாகக் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. முக்கியமான காலகட்டத்தில் இந்தக் கூட்டம் நடந்ததால் எதிர்பார்ப்பு பரபரப்பாக இருந்தது.

இந்தக் கூட்டத்தில் சமீபத்தில் குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு வாழ்நாள் தடை விதித்தும், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு 2 ஆண்டு தடையும் விதித்து தீர்ப்பளித்த நீதிபதி ஆர்.எம்.லோதா கமிட்டியின் உத்தரவு குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டது.

தீர்ப்பை ஏற்போம்

தீர்ப்பை ஏற்போம்

இந்தத் தீர்ப்பை ஏற்போம் என்று ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் தீர்ப்பு குறித்து ஆராய கமிட்டி ஒன்றை அமைக்க நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தீர்ப்பை மதிக்கிறோம்

தீர்ப்பை மதிக்கிறோம்

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், லோதா கமிஷன் தீர்ப்பை முழுமையாக ஏற்கிறோம், மதிக்கிறோம். இந்த தீர்ப்பின் விளைவு குறித்து அறிய உறுப்பினர்கள் ஆர்வமாக உள்ளனர்.

கமிட்டி அமைப்பு

கமிட்டி அமைப்பு

இதுதொடர்பான உறுப்பினர்களின் கவலைகள், சந்தேகங்களைப் போக்கும் வகையில் கமிட்டி அமைத்து இதை ஆராய தீர்மானித்துள்ளோம். இந்த கமிட்டி ஆறு வாரத்தில் தனது அறிக்கையை வாரியத்திடம் அளிக்கும்.

ராஜீவ் சுக்லா அமைப்பார்

ராஜீவ் சுக்லா அமைப்பார்

இந்தக் கமிட்டியை அமைக்கும் அதிகாரம் ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர் விரைவில் கமிட்டி உறுப்பினர்களின் பெயர்களை வெளியிடுவார்.

ஒர்க்கிங் கமிட்டி பரிசீலிக்கும்

ஒர்க்கிங் கமிட்டி பரிசீலிக்கும்

இந்த கமிட்டி அளிக்கும் பரிந்துரை அறிக்கை பிசிசிஐயின் ஒர்க்கிங் கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று உறுப்பினர்கள் பெயர் அறிவிப்பு

இன்று உறுப்பினர்கள் பெயர் அறிவிப்பு

பின்னர் ராஜீவ் சுக்லா செய்தியாளர்களிடம் பேசுகையில், கமிட்டி உறுப்பினர்களின் பெயர்கள் திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். 9வது ஐபிஎல் தொடர் நிச்சயம் பெரிதாகவும், பிரமிக்கத்தக்க வகையிலும் நடைபெறும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

கமிட்டி அமைப்பு

கமிட்டி அமைப்பு

இதனிடையே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தபடி இன்று அந்த கமிட்டி அமைக்கப்பட்டது. இக்கமிட்டியில் ராஜீவ் சுக்லா, அனுராக் தாகூர், சவுரவ் கங்குலி, அனிருத் சவுத்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழு நீதிபதி லோதா தீர்ப்பை ஆராய்ந்து அறிக்கை அளிக்க இருக்கிறது.

Story first published: Monday, July 20, 2015, 15:51 [IST]
Other articles published on Jul 20, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+