Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிசிசிஐ ஒப்பந்தம்.. முழு பட்டியல் இங்கே.. தோனி நீக்கம்.. அதிரடியாக சேர்க்கப்பட்ட இளம் தமிழக வீரர்!

Recommended Video

Dhoni misses out of BCCI's annual player contracts list

மும்பை : 2019-20 ஆண்டுக்கான வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ. இதில் தோனி பெயர் நீக்கப்பட்டது அதிர்ச்சியாக அமைந்தது.

அதே சமயம் ஆறு இளம் வீரர்கள் பிசிசிஐ ஒப்பந்தம் பெற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதில் ஒரு இளம் தமிழக வீரரும் அடக்கம்.

தினேஷ் கார்த்திக் பெயர் நீக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மூத்த டெஸ்ட் வீரர் அஸ்வின் தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

பிசிசிஐ ஒப்பந்தம்

பிசிசிஐ ஒப்பந்தம்

பிசிசிஐ வருடாந்திர தேசிய அணி வீரர்கள் ஒப்பந்தம் வெளியானது. அதில் 27 வீரர்கள் பெயர்கள் இடம் பெற்று இருந்தன. ஒருநாள் போட்டிகள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் குறிப்பிட்ட அளவு போட்டிகளில் இடம்பெற்ற வீரர்களுக்கு நான்கு பிரிவுகளில் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.

நான்கு பிரிவுகள்

நான்கு பிரிவுகள்

வீரர்களின் முக்கியத்துவத்தை வைத்து அவர்களுக்கு நான்கு பிரிவுகளில் சம்பளம் நிர்ணயித்துள்ளது பிசிசிஐ. ஏ+ பிரிவு வீரர்களுக்கு 7 கோடி, ஏ பிரிவு வீரர்களுக்கு 5 கோடி, பி பிரிவு வீரர்களுக்கு 3 கோடி மற்றும் சி பிரிவு வீரர்களுக்கு 1 கோடி என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மூன்று சிறந்த வீரர்கள்

மூன்று சிறந்த வீரர்கள்

ஏ+ பிரிவில் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடும் மூன்று முக்கிய வீரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். அவர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.

ராகுல் உயர்வு

ராகுல் உயர்வு

ஏ பிரிவில் 11 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். பி பிரிவில் இடம் பெற்று வந்த ராகுல், தற்போது ஏ பிரிவுக்கு முன்னேறி இருக்கிறார். அதே போல ரிஷப் பண்ட் இந்த பிரிவில் இடம் பெற்றுள்ளார். அஸ்வின், ஜடேஜா இருவரும் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.

மயங்க் அகர்வால் அதிரடி

மயங்க் அகர்வால் அதிரடி

தன் முதல் பிசிசிஐ ஒப்பந்தம் பெறும் மயங்க் அகர்வால் நேரடியாக பி பிரிவு ஒப்பந்தம் பெற்று அசத்தி இருக்கிறார். பி பிரிவில் ஐந்து வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

வாஷிங்டன் சுந்தருக்கு ஒப்பந்தம்

வாஷிங்டன் சுந்தருக்கு ஒப்பந்தம்

தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் சி பிரிவில் இடம் பெற்றுள்ளார். அந்த பிரிவில் எட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். பி பிரிவில் மயங்க் அகர்வால், சி பிரிவில் நவ்தீப் சைனி, தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர், ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர் என மொத்தம் ஆறு வீரர்கள் புதிதாக பிசிசிஐ ஒப்பந்தம் பெற்றுள்ளனர்.

தோனி நீக்கம்

தோனி நீக்கம்

மூத்த வீரர் தோனி 2019 உலகக்கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணியில் ஆடாத நிலையில் அவர் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அதே போல, அம்பதி ராயுடு, கலீல் அஹ்மது, தினேஷ் கார்த்திக் ஆகியோரின் பெயரும் நீக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

தோனி பெயர் ஒப்பந்தப் பட்டியலில் இடம் பெறாதது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலரும் தோனியை, பிசிசிஐ அவமானப்படுத்தி விட்டதாக கூறி இணையத்தில் வசை பாடி வருகின்றனர்.

ஏ+ மற்றும் ஏ பிரிவு

ஏ+ மற்றும் ஏ பிரிவு

ஏ+ பிரிவு - விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா. ஏ பிரிவு - அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், புஜாரா, அஜின்க்யா ரஹானே, கேஎல் ராகுல், ஷிகர் தவான், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட்.

பி பிரிவு, சி பிரிவு

பி பிரிவு, சி பிரிவு

பி பிரிவு வீரர்கள் - விரிதிமான் சாஹா, உமேஷ் யாதவ், சாஹல், ஹர்திக் பண்டியா, மயங்க் அகர்வால். சி பிரிவு - கேதார் ஜாதவ், நவ்தீப் சைனி, தீபக் சாஹர், மனிஷ் பாண்டே, ஹனுமா விஹாரி, ஷர்துல் தாக்குர், ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர்

Story first published: Thursday, January 16, 2020, 19:03 [IST]
Other articles published on Jan 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+