Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓய்வு பெற்றாலும் உட்கார்ந்த இடத்திலிருந்தே ஒரு கோடி சம்பளம் வாங்கப் போகும் சச்சின்!

மும்பை: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சச்சின் ஓய்வு பெறும் நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலில் அவரது பெயரும் இடம் பெற்றுள்ளது.

2013-14ம் ஆண்டுக்கான வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலை இன்று வெளியிட்டது பிசிசிஐ.

இதில் சச்சின் டெண்டுல்கரின் பெயரை ஏ வீரர்கள் பட்டியலில் சேர்த்துள்ளது பிசிசிஐ. இதன் மூலம் அவருக்கு வருடத்திற்கு ரூ. 1 கோடி சம்பளமாக கிடைக்கும். அதாவது விளையாடாமலேயே உட்கார்ந்த இடத்தில் சம்பளம் வாங்கப் போகிறார் சச்சின்.

ரூ. 1 கோடி சம்பள வீரர்கள்

ரூ. 1 கோடி சம்பள வீரர்கள்

வருடத்திற்கு ரூ 1 கோடி சம்பளம் பெறத் தகுதியுடையவர்கள்தான் இந்த ஏ பட்டியலில் இடம் பெறுகிறார்கள். இதில கேப்டன் டோணி, விராத் கோஹ்லி, ஆர்.அஸ்வின், சுரேஷ் ரெய்னா மற்றும் சச்சின் பெயர் இடம் பெற்றுளது. மொத்தம் 5 பேர் ஏ பட்டியல் வீரர்கள் ஆவர்.

ஷேவாக், ஹர்பஜன் சிங் நீக்கம்

ஷேவாக், ஹர்பஜன் சிங் நீக்கம்

இதுவரை இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்த வீரேந்திர ஷேவாக், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான் ஆகியோர் நீக்கப்பட்டு விட்டனர்.

பி பட்டியலில் 11 பேர்

பி பட்டியலில் 11 பேர்

பி பட்டியலில் 11 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ரூ. 50 லட்சம் சம்பளமாகும். இதில் கம்பீர், யுவராஜ் சிங், பிரக்யான் ஓஜா, இஷாந்த் சர்மா, முரளி விஜய், ஷிகர் தவன், உமேஷ் யாதவ், சட்டேஸ்வர் பூஜாரா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ் குமார், ரோஹித் சர்மா ஆகியோர் உள்ளனர்.

சி பட்டியலில் 9 பேர்

சி பட்டியலில் 9 பேர்

ரூ. 25 லட்சம் சம்பளம் கொண்ட சி பட்டியலில் திணேஷ் கார்த்திக், அமித் மிஸ்ரா, விருத்திமான் சாஹா, அஜிங்கியா ரஹானே, அம்பட்டி ராயுடு, வினய் குமார், முகம்மது ஷமி, ஜெயதேவ் உனத்கத், மொஹித் சர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Story first published: Thursday, November 14, 2013, 17:16 [IST]
Other articles published on Nov 14, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+