அதெல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்.. பலே டோணி!
மும்பை: விராத் கோஹ்லியை அனைத்து வகை கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக்கப் போறாங்களாமே.. இது குறித்து உங்க கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அதெல்லாம் பிசிசிஐ பார்த்துக்கும். நான் கேப்டனாக தொடர வேண்டுமா என்ற முடிவையம் பிசிசியே தீர்மானிக்கும் என்று டோணி பதிலளித்துள்ளார்.
இந்திய ஒரு நாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக இருக்கிறார் டோணி. அதேசமயம், டெஸ்ட் கேப்டனாக விராத் கோஹ்லி இருக்கிறார். டோணி, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்டதால் கோஹ்லி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கோஹ்லியை அனைத்து வகை கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக்க வேண்டும் என்று சிலர் பேச ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக ரவி சாஸ்திரி தம் கட்டிப் பேசி வருகிறார். டோணி வெறும் வீரராக விளையாடட்டும். கோஹ்லி கேப்டனாக கலக்கட்டும் என்று பேசி வருகிறார் சாஸ்திரி. இவர் பயிற்சியாளர் பதவிக்கு அப்ளிகேஷன் போட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

நிஜமா பாஸ்!
இந்த நிலையில் அப்படியா. இது நடக்குமா என்று கேப்டன் டோணியிடமே செய்தியாளர்கள் கேட்டுள்ளனர். அதற்கு டோணியும் தனது பாணியில் பதிலளித்துள்ளார். ஜிம்பாப்வேயில் டோணி தலைமையிலான இந்திய அணி ஒரு நாள் தொடரில் ஆடவுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசினார் டோணி.

அது அவங்க முடிவு பாஸ்!
அப்போது அவர் கூறுகையில், நான் விளையாட்டை ரசித்து ஆடவில்லை என்று கூற முடியாது. பிசிசிஐ என்ன முடிவெடுக்கிறதோ அதுவே முடிவு. எனது கேப்டன் பதவி குறித்தும் பிசிசிஐதான் முடிவெடுக்க வேண்டும். அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். இதில் எனது முடிவு என்று எதுவும் இல்லை என்றார் டோணி.

ஜிம்பாப்வே தொடர்
ஜிம்பாப்வே அணியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. பல சமயங்களில் அது நம்மை சோதித்துள்ளது. சவாலாக இருந்துள்ளது. சரியான பேட்டிங் இல்லாவிட்டால் நாம் சிரமப்பட நேரிடும்.

இவங்களை வச்சுக்கிட்டு!
நமது அணியில் தற்போது பல புதிய முகங்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களை வைத்துக் கொண்டு ஜி்ம்பாப்வேவுடன் விளையாடவிருப்பது புதிய அனுபவமாக இருக்கும் என்றார் டோணி.

3+3 போட்டிகள்
இந்தியாவும், ஜிம்பாப்வேயும் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடவுள்ளனர். ஜூன் 11ம் தேதி இந்தத் தொடர் ஆரம்பிக்கிறது. முதல் ஒரு நாள் போட்டி ஹராரேவில் 11ம் தேதி நடைபெறும்.


Click it and Unblock the Notifications